சிறந்த 10 புத்தகங்கள் பட்டியல்
புத்தகம் படிப்பது என்பது சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. ஆனால் புத்தகம் படிப்பது என்பது நமக்கு அறிவாற்றலையும் கற்றுக்கொடுக்கும், அதேபோல் நிறைய விதமான விஷயங்களை செய்யவைக்கும். புத்தகம் படிக்க ஆரம்பம் செய்தால் நம்மை நாமே தொலைக்கும் இடமும் புத்தகம் வாசிப்பது தான்.
முதலில் புத்தகம் வாசிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால் இந்த 10 புத்தகத்தை படியுங்கள். ஏனென்றால் எதோ ஒரு புத்தகத்தை படித்தால் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் அதன் பின் புத்தகம் படிப்பதை நிறுத்தி விடுவீர்கள் அதனால் தான் இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்று சொல்கிறேன்.
புத்தகத்தில் உள்ளது வெறும் வார்த்தைகளாக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது வாழ்க்கையாகவும் உள்ளது. அவ்வளவு ஏன் நாம் திரும்பி பார்க்க செய்தவர்களுக்கு ஒரு படிக்கல்லாக இருந்ததும் புத்தகங்கள் என்றும் சொல்லாம்.
அதனால் தான் சொல்றேன் புத்தகம் நம்மை நாமே செதுக்கிக்கொள்ளும் உளி என்றும் கூறலாம். ஆகவே புத்தகம் படிக்க நினைத்தால் இந்த சிறந்த 10 புத்தகங்களை படித்து பாருங்கள். அதன் பின் போன் தேவை இருக்காது. உங்களை நீங்களே புத்தகம் இல்லாமல் பார்க்க முடியாது. வாங்க அந்த புத்தகத்தின் பட்டியலை பார்ப்போம்.
சிறந்த 10 புத்தகங்கள் பட்டியல்:
பொன்னியின் செல்வன் புத்தகம் :
பொன்னியின் செல்வன் இந்த புத்தகத்தை எழுதியவர் அமரர் கல்கி ஆவார். இந்த புத்தகம் ஒரு வரலாற்று புதினம். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வந்தது. பொன்னியின் செல்வன் கதையை மக்கள் கொடுத்த ஆதரவு பெற்றது அதன் காரணமாக கல்கி இதழ் தொடர்கதையாக வெளியிட்டது. மேலும் தனி நூலாகவும் வெளிவந்தது இந்த புத்தகம். கி.மு 10 நூற்றாண்டில் இருந்து வந்த சோழ பேரரசை அடிப்படையாக கொண்டு இந்த வரலாற்று புதினம் எழுத பட்டிருக்கிறது.
புயலிலே ஒரு தோணி புத்தகம்:
தமிழிலே எந்த நாவல் ஆசிரியரும் தொட்டிடாத ஒரு சிகரம் தனக்கான ஒரு மொழியை வழியே ப. சிங்காரம் தொட்டுள்ளது தனித்துவமானது. ஏனென்றால் இந்த புத்தகத்தில் பெயர் போல் தான் அந்த புத்தகத்தின் கதையும் அலை பாய்ந்து கொண்டு இருக்கும். இந்த புத்தகம் வேறுவேறு பெயரில் கொண்டு வெளிவந்து கொண்டு தான் உள்ளது.
ஒரு புளியமரத்தின் கதை நாவல்:
இந்த புத்தகத்தை எழுதியவர் சுந்தர ராமசாமி. இந்த புத்தகம் ஒரு நவீன செவ்வியல் பதிவாக வெளிவந்து விட்டது. 1966 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதேபோல் இந்த புத்தகம் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலத்தின் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தம் 2000 ஆம் ஆண்டு தமிழிலிருந்து நேரடியாக Hebrew-வில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்ற பெருமை இதுவே.
கோபல்ல கிராமம் நாவல்:
இந்த புத்தகத்தை கி. ராஜநாராயணன் எழுதியுள்ளார். இந்த நூலில் கிராமதில் பேசிய மொழியாக இருக்கும். அது படிப்பவர்களுக்கு புரியாமல் போகாது, அதேபோல் இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு சலித்தும் போகாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தொழில் தொடங்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்
கடல் புறா நாவல்:
இந்த புத்தகத்தின் ஆசிரியர் சாண்டில்யன் ஆவார். இதுவும் ஒரு வரலாற்று புதினமாகும். விசய நாட்டிலிருந்து சோழ உதவி தேடி வரும் இளவரசருக்கு, அவரது மக்களுக்கும் சோழ இளவரசன் உதவும் நிலையை இந்த புத்தகத்தில் ஒரு பகுதியாக இருக்கும்.
மோகமுள் நாவல்:
மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகம் மோகமுள் ஆகும்.
ஜே ஜே சில குறிப்புகள் நாவல்:
இந்த புத்தகம் சுந்தர ராம சாமியின் புதினம். இந்த புத்தகத்தில் மலையாள கலாசாரத்தின் பின்னணியில் தமிழ் கலாசாரம், தமிழில் வாழ்வின் விமர்சனத்தை எழுதியுள்ளார்.
சிவகாமியின் சபதம் நாவல்:
இந்த புத்தகத்தை எழுதியதும் அமரர் கல்கி தான். இதுவும் வரலாற்று புதினம் ஆகும். பல்லவர் சமுதாயத்தை கண்களுக்கு முன் நிறுத்தும் அற்புதமான புத்தகம் ஆகும்.
அலை ஓசை நாவல்:
சுகந்திர போராட்ட காலகட்டத்தில் சுகத்திரத்தின் போது ஏற்பட்ட பிரிவின் போது பொது மக்களின் மனநிலை குறித்து எழுதப்பட்ட புத்தகம் இது. இந்த புத்தகம் சாகித்ய விருது பெற்றுள்ளது.
உடையார் நாவல்:
இந்த புத்தகத்தை எழுதியவர் பாலகுமாரன் ஆவார். ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்த விதம் குறிப்பாக தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றை கதைக்களமாக கொண்டு எழுதபபட்டது. இந்த புத்தகம் 6 பாகம் கொண்டுள்ளது. இந்த புத்தகம் தமிழ் இலக்கியத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்..!
இதுபோன்ற புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்ள | books |