அப்துல் கலாம் எழுதிய புத்தகங்கள்
நாம் சிறுவயதில் பள்ளிக்கு செல்ல ஆரம்பம் செய்த காலத்தில் இருந்து சின்ன சின்ன புத்தங்கள் என்று ஆரம்பித்து இன்று வரை நாம் நிறைய புத்தங்கள் படித்து இருப்போம். நாம் படித்து இருக்கும் எத்தனையோ புத்தகங்களில் ஒரு சில புத்தகம் மட்டும் மிகவும் பிடித்ததாக இருக்கும். அந்த வரிசையில் இந்தியாவின் குடியரசு தலைவராகவும் மற்றும் அனைவருக்கும் ஒரு முன்னோடியாகவும் இருக்கின்ற APJ அப்துல் கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அத்தகைய புத்தகங்களின் பட்டியல்கள் பற்றி விரிவாக பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள்⇒ இந்த புத்தகத்தை படிக்காமல் இருக்காதீர்கள்..! சிறந்த 10 புத்தகத்தின் பட்டியல்..!
APJ Abdul Kalam Written Books in Tamil:
அக்னிச் சிறகுகள் புத்தகம்:
அப்துல் கலாம் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை மையமாக வைத்து அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் மாணவர்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை கொண்டு செல்கிறது.
இக்னைடெட் மைண்ட்ஸ் புத்தகம்:
Ignited Minds என்ற புத்தகத்தில் அப்துல் கலாம் அவர்கள் ஏவுகணை பற்றிய முழுவிவரங்களையும் அவருடைய பணியை அடிப்படியாக வைத்து எழுதியுள்ளார்.
டார்கெட் 3 பில்லியன் புத்தகம்:
Target 3 Billion புத்தகமானது நாம் வாழ்ந்து கொண்டியிருக்கும் வாழ்க்கையின் நிலையை பற்றியும் மற்றும் நாம் வாழ்க்கையில் இன்னும் கற்றுக்கொண்டு முன்னேற வேற வேண்டியவை பற்றியும் மிகவும் தெளிவாக அப்துல் கலாம் அவர்கள் எழுதியுள்ளார்.
இன்ஸ்பைரிங் தாட்ஸ் புத்தகம்:
கலாம் எழுதிய Inspiring Thoughts புத்தகமானது நமது வாழ்க்கையில் சிந்தனையை தூண்டும் வகையிலும் மற்றும் நமது அறிவின் ஆற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் நாம் ஒருவரை முன்னிலையில் வைத்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை பற்றி மிகவும் சிறப்பாக இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
திருப்புமுனைகள் புத்தகம்:
கலாம் அவர்கள் முதலில் எழுதிய அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தை வாசித்த பிறகு தான் தனக்குள் விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது அது தான் என்னுடைய வாழ்க்கையின் திருப்பு முனை என்று இந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
அதுபோல நாம் அனைவரும் நிறைய புத்தகங்களை படித்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நமக்குள் ஒரு திருப்பு முனை வரும் என்றும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
எனது பயணம் புத்தகம்:
கனவு என்பது நம் தூக்கத்தில் வருபவை மட்டும் இல்லை நாம் எப்போதும் வாழ்க்கையில் தூங்கிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் வருகிறது என்று எனது பயணம் புத்தகத்தில் முக்கியாக கலாம் எழுதியுள்ளார்.
தி லுமினஸ் ஸ்பார்க்ஸ்:
நமக்குள் இருக்கும் திறமை கவிதை, கட்டுரை, ஓவியம் இதுபோல எதுவாக இருந்தாலும் அதை நாம் வெளிக்கொண்டு வந்து முன்னேற வேண்டும் என்று இந்த The Luminous Sparks புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
மிஷன் இந்தியா:
கலாம் எழுதிய Mission India புத்தகத்தில் இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொரும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்தியாவை வல்லரசு நாடக மாற்ற வேண்டும் என்று நம் ஒவ்வொரு மனதிலும் பதியும் படி எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள்⇒ APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எது தெரியுமா…?
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். | BOOKS |