உங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்..!

Best Books for General Knowledge in Tamil

Best Books for General Knowledge in Tamil

இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென்றாலும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது கட்டாயம் ஆகிவிட்டது. அப்படி போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு முதலில் நாம் நமது பொது அறிவை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நீங்களும் போட்டி தேர்வுகளுக்காக உங்களை தயார் செய்து கொண்டுள்ளீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.

ஆம் நண்பர்களே இந்த பதிவில் சிறந்த பொது அறிவு புத்தகங்கள் பற்றி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன புத்தகங்கள் என்று அறிந்துக் கொண்டு அவற்றை வாங்கி படித்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

1. Lucent’s General Knowledge:

Lucent gk book in tamil

நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் பொது அறிவு புத்தகத்தின் பெயர் Lucent’s General Knowledge என்பது ஆகும். இதன் ஆசிரியரின் பெயர் வினய் கர்ணா ஆவார்.

UPSC போட்டி தேர்வு விண்ணப்பதாரர்களில் 10 பேரில் குறைந்தது 8 பேராவது Lucent’s General Knowledge புத்தகத்தை தங்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக படித்ததை ஒப்புக்கொள்வார்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்..!

இந்தப் புத்தகம் UPSC மட்டுமின்றி மேலும் பல போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் உள்ளடக்கத்தை புதுப்பிக்க மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு பொருத்தமானதாக அமைவதற்கும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது.

இந்த புத்தகம் வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்திய அரசியல் மற்றும் பொது அறிவியல் பிரிவுகள் என அனைத்து துறையின் தகவல்களை கொண்டுள்ளது.

2. General Knowledge 2022:

Gk book in tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் புத்தகத்தின் பெயர் General Knowledge 2022 ஆகும். இதன் ஆசிரியர் மனோகர் பாண்டே ஆவார். இந்த புத்தகம் வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் பொது அறிவியல் ஆகிய ஐந்து முக்கிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது.

இந்த பிரிவுகளில் உள்ள அனைத்து முக்கிய தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. இதன் மூலம் போட்டி தேர்வுகளில் மேல் கூறியுள்ள பிரிவுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

3. S. Chand’s Advanced Objective General Knowledge:

GK book tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் புத்தகத்தின் பெயர் S. Chand’s Advanced Objective General Knowledge ஆகும். இதன் ஆசிரியர் ஆர்.எஸ்.அகர்வால் ஆவார்.

இந்தப் புத்தகத்தின் சமீபத்திய பதிப்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்து அனைத்து மேம்படுத்தப்பட்ட கேள்விகளும் உள்ளன. மேலும் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதையும் படித்துப்பாருங்கள்=> தொழில் தொடங்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்

4. Concise General Knowledge Manual 2021:

General knowledge 2022 in tamil

நாம் அடுத்து பார்க்க இருக்கும் புத்தகம் Concise General Knowledge Manual 2021 ஆகும். இதன் ஆசிரியர் எட்கர் தோர்ப் மற்றும் ஷோவிக் தோர்ப் ஆகியோர் அவர்கள்.

இந்த புத்தகம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பொது அறிவின் சுருக்கமான வடிவம் ஆகும். இந்தப் பட்டியலில் உள்ள மற்ற புத்தகங்களைப் போலவே இந்த புத்தகமும் வங்கி, ரயில்வே மற்றும் UPSC போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக சிறப்பாகச் உருவாக்கப்பட்டுள்ளது.

5. One Liner Approach General Knowledge – 1822:

General knowledge 2022 tamil

நாம் இறுதியாக பார்க்க இருக்கும் புத்தகத்தின் பெயர் One Liner Approach General Knowledge – 1822 ஆகும். இதன் ஆசிரியர் கிரண் பிரகாஷன், பிரதியோகிதா கிரண் மற்றும் KICX ஆகியோர் அவர்கள்.

இந்த புத்தகம் பொது அறிவை ஒரு தனித்துவமான மற்றும் துல்லியமான வழியில் அணுகுகிறது. இதில் ஒரே ஒரு வரியில் மாணவர் அறிந்துக் கொள்ள வேண்டிய அனைத்து தேவையான தகவல்களையும்  அளிக்கிறது.

இந்த புத்தகத்தில் பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா, இசை, கலை, கலாச்சாரம், கட்டிடக்கலை, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பிரிவுகளில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களும் அளிக்கப்பட்டிருக்கும்.

மேலும் இந்த புத்தகம் உலக வரலாறு மற்றும் புவியியல் போன்ற சில தலைப்புகளின் உலகளாவிய அம்சங்களையும் உள்ளடக்கியது.

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS