தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

Advertisement

Best Business Books in Tamil

நண்பர்களே வணக்கம்!. தொழில்முனைவோர் ஆக விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு பயன்படும் என்று நினைக்கிறேன். எப்படி அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று நினைப்பீர்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஓர் எண்ணம் நாம் எதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது அடிக்கடி மனதில் தோன்றும் விஷயம் தான். ஆனால் எந்த தொழில் செய்யலாம் எப்படி செய்வது போன்ற பல குழப்பங்கள் மனதில் இருப்பது இயல்பு தான். அதனை போக்குவதற்கு, நீங்கள் அவசியம்  நல்ல புத்தகங்களை நேரம் இருக்கும் போதெல்லாம் படிக்க வேண்டும் .ஆகவே நாம் இந்த பதிவின் வாயிலாக சிறந்த Business Books பற்றி பார்க்க போகிறோம். வாங்க அது என்ன  என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம்.

Best Business Books in Tamil:

GOOD TO GREAT  BOOK:

GOOD TO GREAT BOOK

முதலாவதாக நாம் பார்க்க போகும் புத்தகத்தில் பெயர் GOOD TO GREAT புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தை எழுதியவர் Jim collins ஆவார். இந்த புத்தகமானது உலகளவில் பிரபலமான புத்தகம் ஆகும். இதனை ஏன் அவ்வளவு பெரிதாக உள்ளது என்றால் இந்த புத்தகத்தை 21 நபர்களுடன் ஆய்வு செய்து அதன் பின் எழுதினார். அந்த நபர்கள் அனைவருக்கும் 6,000 ஆர்டிகள் மேல் படித்தார்கள். மேலும் 1,000 பேருக்கு மேல் நேர்காணல் செய்தார்கள் இதன் மூலம் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவந்துள்ளது. இந்த புத்தகத்தை எழுத 2 வருடங்கள் தேவைப்பட்டது.

இந்த புத்தகத்தில் ஒரு கம்பெனி நன்றாக உள்ளது என்றால் அதனை மேம்மேலும் சிறப்பாக முன்னேற்ற என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லி உள்ளாவர்கள். அதாவது இவர்கள் அந்த அடிப்படியில் தான் கம்பெனிக்கு சென்று ஆய்வு செய்து உள்ளார்கள்.

Blue Ocean Strategy Book:

Blue Ocean Strategy Book

இரண்டாவது பார்க்க போகும் புத்தகத்தின் பெயர் Blue Ocean Strategy இந்த புத்தகமும் உலகளவில் பிரபலமான புத்தகம் ஆகும். இந்த புத்தகமும் ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தில் சொல்வது என்னவென்றால் நாம் அனைவரும் அதிக தேவை உள்ள பொருட்களை மட்டுமே வியாபாரம் அல்லது உற்பத்தி செய்கிறோம். ஆனால் அதற்கு நிறைய கடைகள் இருக்கும். அதேபோல் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பொருட்கள் கிடைக்கும். இருந்தாலும் அதில் உங்களுக்கு லாபமானது இருக்காது. இந்த புத்தகத்தில் எப்படி விலைவாசியை குறைத்து உங்களை தொழில் பெரிய அளவில் நகர்த்த முடியும் என்பதை இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

Zero to One Book:

Zero to One Book

இந்த புத்தகத்தை எழுதியவர் Peter thiel ஆவார். இவர் பிரபலமான ஒருவர். இவர் ஏன் பிரபலம் என்றால் இவர் PayPal நிறுவனத்துடைய (Founder). இவரால் நிறைய கம்பெனி உருவாக்கப்பட்டது. இவர் இந்த புத்தகத்தில் வாயிலாக சொல்வது என்னவென்றால் நிறைய விஷயங்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அது அனைத்துமே கண்டுபித்த ஒன்றாக உள்ளது. புதிய விஷயங்ககளை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் நிறைய கேள்விகள் கேட்கிறார். அதேபோல் நம்முடைய தொழிலை நஷ்டம் அடையாமல் எப்படி நடத்த முடியும் என்பதை நிறைய உதாரணத்துடன் சொல்கிறார்.

Stay Hungry Stay Foolish

 

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉  இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்..!

I Have a Dream BOOK

கடைசியாக ராஷ்மி பன்சால் இவர் எழுதிய புத்தகங்களை படித்துவிடுங்கள். ஏன் இவர் எழுதிய புத்தகத்தை படியுங்கள் என்று சொல்கிறேன் என்றால். இவர் வெற்றியடைந்த சாதனையாளர்களை நேரடியாக சென்று பேட்டி எடுத்து அதனை 5 முதல் பத்து பக்கத்திற்கு நமக்கு அழகா அளிக்கிறார். இவர் ஒரு புத்தகத்தில் 10 பக்கத்திற்கு ஒருவரிடைய விஷயத்தை அழகா சொல்கிறார்.  இவர் எழுதிய புத்தகத்தின் பெயரை Stay Hungry Stay Foolish, I Have a Dream என நிறைய விதமான புத்தகத்தை எழுதி உள்ளார்.

 

தொழில் தொடங்கும் அனைவருமே இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்..!
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 
Advertisement