பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள்..!

best stock market books in tamil

பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள்

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு தான். பங்கு சந்தை என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியுமா? சிலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது ஆனால் ஆர்வம் இருக்கும். அதனை பற்றி தெரிந்துகொள்ள யாரிடம் கேட்பது என்று தெரியாது.

சிலர் பங்கு சந்தை என்ற வார்த்தையை கேட்டிருப்பது போல் இருக்கும். அது செய்திகளின் பங்குச்சந்தை நிலவரம் என்று சொல்வார்கள். அப்போது அனைவருமே Tv யை மாற்றிவிடுவீர்கள் ஏனென்றால் அதனை பற்றிய முழு விவரம் தெரியாது. இனி கவலை வேண்டாம் உங்களுக்கு பங்குச்சந்தையை பற்றி தெரிந்துகொள்ள சில வகையான புத்தகங்களை இங்கு பார்ப்போம் வாங்க..!

Best Stock Market Books in Tamil:

சிலர்க்கு பங்கு சந்தையை பற்றி தெரியாது அதில் முதலீடு செய்வது எப்படி என்பதும் தெரியாது. ஆனால் அதனை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்போம்.  ஆனால் நம் கூட உள்ள நண்பர்களுக்கும் அதனை பற்றி தெரியாது. ஆனால் வெறும் ஆர்வத்தை வைத்து என்ன செய்வது என்று யோசிப்பீர்கள். அந்த ஆர்வம் உங்களுக்கு கை கொடுக்கும். இனி யாரிடமும் கேட்க தேவை இல்லை. கீழ் கொடுக்கப்பட்ட புத்தகத்தை படித்து பங்கு சந்தை என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள இந்த புத்தகத்தை படியுங்கள்..!

அள்ள அள்ள பணம் பங்குச்சந்தை அடிப்படைகள் புத்தகம் 

அள்ள அள்ள பணம் பங்குச்சந்தை அடிப்படைகள் புத்தகம் 

இந்த புத்தகத்தை எழுதியவர் சோம வள்ளியப்பன் அவர்கள். இந்த புத்தகத்தில் பங்கு சந்தையை பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்கு இந்த புத்தகம் உதவியாக இருக்கும். இந்த புத்தகத்தில் பங்கு சந்தையை பற்றிய அனைவருக்கும் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் படிகளை பற்றி தெளிவாக சொல்லி இருப்பார்.

அள்ள அள்ள பணம் 2 அனாலிசிஸ் புத்தகம் 

அள்ள அள்ள பணம் 2 அனாலிசிஸ் புத்தகம் 

இந்த புத்தகத்தை எழுதியவரும் சோம வள்ளியப்பன் அவர்கள் தான். இந்த புத்தகத்தை யார் படிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு பங்குச் சந்தையை பற்றி ஓரளவு தெரியும் என்றால் அவர்களுக்கு பங்கு சந்தையில் எப்படி ஷேர் செலக்ட் செய்வது அதில் எப்படி முதலீடு செய்வதது என்பதை பற்றி தெளிவாக சொல்லிருப்பார். அதேபோல் நிறைய பங்கு சந்தையை பற்றி தெரிந்துகொள்ள இந்த புத்தகத்தில் பெயரில் நிறைய சீரிஸ்எழுதி இருப்பார் அதனை வாங்கி படித்து தெரிந்துகொள்ளவும். இந்த புத்தகத்தில் பங்கு சந்தை பற்றிய ஒரு ஐடியா கிடைக்கும்.

பணக்கடவுள் புத்தகம் 

பணக்கடவுள் புத்தகம் 

பங்கு சந்தையை பற்றி தெரிந்தால் போதுமா அதற்கு எப்படி அப்பை செய்வது அதன் மூலம் நாம் எப்படி பணத்தை ஈட்டுவது என்கின்ற நிறைய கேள்வி இருக்கும் அதற்கு நீங்கள் பணக்கடவுள் என்று புத்தகத்தை படிக்கலாம். இந்த புத்தகத்தில் வாரன் பஃபெட்  என்பவரின் வாழ்க்கையை பற்றி எழுதி இருப்பார். இந்த புத்தகத்தை எழுதியவர் செல்லமுத்து குப்பு சாமி ஆவார். இவர் பிரபலமானவர் இவர் எழுதிய புத்தகத்தை படிக்கலாம். அது அனைத்துமே வாழ்க்கையில் மேல் படிக்கு எடுத்து செல்லும்.

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தை குவியுங்கள் புத்தகம் 

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தை குவியுங்கள் புத்தகம் 

இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள் அதனை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்கள். அதனுடைய பெயர் think and grow rich ஆகும். இந்த புத்தகத்தை எழுதியவர் நெப்போலியன் ஆவார். இவர் எப்படி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் என்றால் நிறைய விதமான ஆய்வுகள் செய்தார் பங்குசந்தையில்  வெற்றி அடைந்தவர்களை சந்தித்து அவர்களிடம் பேசி அதனை வைத்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் பணத்தை சம்பாதிக்க மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்பதையும் தெளிவாக சொல்லிருப்பார்.

பணக்கார தந்தை ஏழை தந்தை புத்தகம் 

பணக்கார தந்தை ஏழை தந்தை புத்தகம் 

இந்த புத்தகத்தை எழுதியவர் ராபர்ட் கியோசாகி என்பவர் ஆவார். இந்த புத்தகம் உலக அளவில் பிரபலமான புத்தகம் ஆகும். பணத்தை பற்றிய நம்மிடம் உள்ள புரிதலை வேறு ஒரு பாதைக்கு எடுத்து செல்லும். ஆகவே மேல் கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தை படித்தாலே பங்கு சந்தையை பற்றிய முழு விவரம் கிடைக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். BOOKS