தொழில் தொடங்கும் அனைவருமே இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்..!

Advertisement

தொழில் புத்தகம்

நண்பர்களே வணக்கம் இதுவரை நாம் அனைவருமே பொதுநலம்.காம் பதிவில் தொழில் தொடங்குவதை பற்றியும், என்ன தொழில் செய்யலாம் என்றும் வெவ்வேறு வகையான தொழில்களை தினமும் உங்களின் நண்பனாக பரிந்துரை செய்துகொண்டு இருப்பதில் பெரும் மகிழ்ச்சி ஆனால் இதுவரை தொழிலை பற்றி மட்டும் பரிந்துரை செய்த நாங்கள் இனி எந்த புத்தகத்தை படித்தால் என்ன தொழில் செய்யலாம் என்று சொல்ல போகிறோம். இந்த பதிவை படிக்கும்போதே தெரியும் இதற்கெல்லாம் புத்தகம் உள்ளதாக என்று நினைப்பீர்கள். ஒரு தொழிலின் கணக்குகளை பார்த்துக்கொள்ள 3  வருடம் படித்துக்கொண்டு தான் இதுவரை மாணவர்கள் வருகிறார்கள் அப்படி இருக்கும்போது தொழில் தொடங்க புத்தகம் இருக்க கூடதாக..! வாங்க டாப் 10 busniess புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்..!

Business Books in Tamil:

தொழில் தொடங்கலாம் வாங்க

  1. இன்று நாம் 10 வதாக பார்க்க கூடிய புத்தகத்தின் பெயர் தொழில் தொடங்கலாம் வாங்க என்ற பெயர். இந்த புத்தகத்தில் என்ன மாதிரியான தொழில் தொடங்கலாம், தொழிலில் உள்ள ஏற்ற இரக்கம் போன்றவற்றை அழகாக சொல்லிருக்கிறார் டாக்டர் ஆர். கார்த்திகேயன்.

லாஜிஸ்டிக்ஸ் புத்தகம்

இரண்டாவதாக 9 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய புத்தகத்தின் பெயர் லாஜிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தை பா. பிரபாகரன் எழுதியுள்ளார், இவர் தூத்துக்குடியில் பிறந்துள்ளார், அண்ணா யூனிவர்ச்சிட்டிலில் B.E படித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடி துறைமுகத்தில் 10 வருடம் பணியாற்றியுள்ளார், அதேபோல் வெளிநாட்டிலும் பணியாற்றியுள்ளார். அதனால் அவர் அவர் பெற்ற அனுபவத்தை இந்த புத்தகத்தில் விவரமாக புத்தகமாக வெளியிட்டு உள்ளார்.

பிஸ்னஸ் தந்திரங்கள்

எட்டாவது இடத்தில் இருக்கிற புத்தகத்தின் பெயர் பிஸ்னஸ் தந்திரங்கள், தொழில் வெற்றிக்கான யுத்திகள் இந்த புத்தகத்தை பேராசிரியர் ஸ்ரீ ராம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் தொழில் எந்த மாதிரியான ரகசியங்கள் இருக்கிறது என்றும் அவருடைய அனுபவ ரீதியாக புத்தகமாக வெளியிட்டு உள்ளார்.

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

அடுத்ததாக நாம் பார்க்க போகிறது மார்க்கெட்டிங் மாயாஜாலம் என்ற புத்தகத்தை சதீஸ் கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார், இந்த புத்தகத்தில் என்ன பொருட்கள் விற்றாலும் அதனை அதிகமாக விற்க வேண்டும் என்பதை தான் வெளியிட்டு உள்ளார். சதீஸ் கிருஷ்ணமூர்த்தியை பற்றி கேட்டால் இவர் அமெரிக்காவில் டெம்பிள் யூனிவர்சிட்டியில் MBA படித்துள்ளார், நிறைய நிறுவனங்களில் முன்னணி பதவியில் இருந்துருகிறார்.

தொழில் முனைவோர் கையேடு

அடுத்தபடியாக பார்க்க போகிற புத்தகத்தின் பெயர் தொழில் முனைவோர் கையேடு என்பது தான். இந்த புத்தகத்தை எழுதியவர் பெயர் எஸ்.எல்.வி மூர்த்தி ஆவார், இவர் அலகாபாத்தில் IAM யில் MBA பட்டம் பெற்றவர். இவர் நிறைய இதழ்களில் நிர்வாகம் சார்ந்த கட்டுரையை தொடர்ந்து எழுதி வருகிறார்.

ஷேர் மார்க்கெட் ABC

அடுத்து பரிந்துரை செய்ய போகிற புத்தகம் ஷேர் மார்க்கெட் ABC  என்னும் புத்தகம் இந்த புத்தகத்தை எழுதியவர் செல்ல முத்து குப்புசாமி ஆவார். இந்த புத்தகத்தில் ஷேர் மார்க்கெட் பற்றிய நுண்ணியமாக பதிவிட்டு உள்ளார்.

பிஸ்னஸ் சைக்காலஜி

பிஸ்னஸ் சைக்காலஜி இந்த புத்தகத்தையும் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார், இவர் தொழிலுக்கு தேவையான புத்தகத்தை பற்றி வெளியிட்டு வருகிறார் இதற்கு முன் மார்கெட்டிங் மாயாஜாலம் புத்தகத்தை வெளியிட்டு உள்ளார்.

தொழில் முன்னோடிகள்

தொழில் முன்னோடிகள் இந்த புத்தகத்தை எழுதியவர் தான் முன்பு தொழில் முன்னோடிகள் கையேடு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார், இந்த புத்தகத்தில் நீங்களே ஒரு நிறுவனமாக மாறுவதற்கு தேவையான வழிகாட்டியாக புத்தகத்தை வெளியிட்டுள்ளார்

பணக்கார தந்தை ஏழை தந்தை

பணக்கார தந்தை ஏழை தந்தை என்ற புத்தகம் இந்த புத்தகம் ஆங்கிலத்தில் அதிகமாக விற்பனை ஆகியிருக்கிறது. இந்த புத்தகத்தை எழுதியவர் ராபர்ட் கியோஸாகி என்பவர் எழுதியுள்ளார்.

பிஸ்னஸ் சிக்ரெட்

இந்த புத்தகத்தின் பெயர் பிஸ்னஸ் சிக்ரெட்ஸ் ஆகும். இந்த புத்தகத்தை எழுதியவர் கவின்கேர் சி.கே ரங்கநாதன் ஆவார். இவர் அவருடைய சொந்த பிஸ்னஸ் பற்றி விவரங்களை பற்றியும் நுணுக்கங்களை பற்றியும் தெரிவித்துள்ளார். ஆக உங்களுக்கு இந்த 10 புத்தகங்களின் எந்த புத்தகம் பிடிக்கிறதோ அல்லது தேவை படுகிறதோ அதனை வாங்கி படித்து தெரிந்துகொள்ளவும்.

தொழில் தொடங்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement