தொழில் தொடங்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் | Business Ideas Books in Tamil

Advertisement

பிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் | Best Business Ideas Books in Tamil

எல்லோருக்கும் பெரிய அளவில் உயர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிலர் தாங்கள் பணிபுரியும் துறைகளில் ஜாம்பவான்களாக இருந்து அந்த உயரத்தை அடைவார்கள். ஆனால் எல்லோரும் அதில் சாதிக்க முடியாது, ஆனால் தொழிலில் ஒருவர் தான் நினைத்த உயரத்தைப் பொருளாதார ரதியில் நிச்சயம் அடைய முடியும். எல்லோராலும் தொழிலில் சாதிக்க முடியும் என்றால் நிச்சயமாக உங்களின் மனநிலை, சூழல், சிறப்பான குழு இருந்தால் வெற்றி பெற முடியும். பிசினஸ் பற்றிய தெளிவு இல்லாதவர்கள்  தெளிவுக்கு வர இந்த 5 புத்தகங்களைப் படித்தால் நிச்சயம் உதவியாக இருக்கும். வாங்க அது என்னென்ன புத்தகம் என்று பார்க்கலாம்.

The $100 Startup:

best business ideas books in tamil

  • The $100 Startup என்கிற புத்தகம் புதிதாக தொழில் தொடங்க நினைப்பவருக்கு உதவியாக இருக்கும். இந்த புத்தகத்தை Chris Guillebeau என்பவர் எழுதியுள்ளார்.
  • எல்லோரும் தொழில் தொடங்குவதற்கு நிறைய முதலீடு வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் குறைந்த முதலீடு வைத்தும் தொழில் தொடங்க முடியும் என்பதை பல உதாரணங்களோடு விளக்கியுள்ளார் Chris Guillebeau.
  • நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் உங்கள் தொழிலுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு Emotion இருக்க வேண்டும். மக்களுக்கு தேவைப்படும் பொருளை விற்பனை செய்வதில் நாட்டம் கொள்ளுங்கள்.

Rich Dad Poor Dad:

best business ideas books in tamil

  • Robert T. Kiyosaki என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, தமிழிலும் இந்த புத்தகம் உள்ளது.
  • நிதி, பணம், முதலீடு, சொத்து என பல்வேறு விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இந்தப் புத்தகம் பணத்தின் மீதான பார்வையையே மாற்றிவிடும் மிக முக்கியமான புத்தகம்.

Zero to One:

business ideas books in tamil

  • இந்த புத்தகத்தை Peter Thiel மற்றும் Blake Masters இணைந்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் இவர் சொல்லும் மூன்று கருத்து மற்றவர்கள் உங்களால் எது முடியாது என்று சொல்கிறார்களோ அதில் சாதித்து காட்டுங்கள் என்றும்.
  • சிறிய சந்தைகளை Dominate செய்து தொழில் தொடங்க வேண்டும்.
  • நீங்கள் தொழிலில் வெற்றி பெற அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களுடைய உழைப்பை நம்ப வேண்டும் என்று கூருகிறார்.

Will it Fly:

பிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்

  • Pat Flynn என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். ஆன்லைன் மூலம் தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். ஒரு சிலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், ஆனால் சரியான திட்டம் இருக்காது, அப்படிபட்டவர்களுக்கு இந்த புத்தகம் உதவும்.
  • இதில் ஒரு தொழிலை எப்படி தொடங்க வேண்டும், எப்படி தொடங்கினால் வெற்றி கிடைக்கும் அணைத்து விஷயங்களையும் கூறியுள்ளார்.
  • பிசினஸில் வெற்றி பெற மார்க்கெட்டிங் மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்பவர்களாலேயே தொழிலில் சாதிக்க முடியும் என்று Pat Flynn கூறுகிறார்.

Profit First:

business ideas books in tamil

  • Mike Michalowicz என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். பிசினஸில் லாபத்தை எவ்வாறு பெறுவது என்ற சில வழிமுறைகளை இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். செலவு செய்வதற்கு முன்பு உங்களின் லாபத்தை தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.
  • உங்களிடம் எவ்வளவு தொகை இருக்கிறதோ அதை வைத்து முதலீடு செய்து தொழிலை தொடங்குங்கள் என்றும் கூறுகிறார்கள். இன்னும் பல தகவல்களை இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
  • நீங்கள் புதிதாக தொழில் தொடங்க பொகிறிர்கள் என்றால் நிச்சயம் மேலே கூறப்பட்டுள்ள புத்தகத்தை படியுங்கள் கண்டிப்பாக பிசினஸில் சாதிக்க முடியும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement