விற்பனை சார்ந்த நுட்பங்களை தெரிந்து கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்..!

Advertisement

Business Sales Techniques Books

இன்றைய பதிவில் விற்பனை சார்ந்த நுட்பங்களை தெரிந்து கொள்ள உதவும் புத்தகங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். மனிதனாக பிறந்த அனைவருமே புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். அது ஒரு நல்ல விஷயம் ஆகும். சிலர் எப்பொழுதும் ஏதாவதொரு புத்தகங்களை படித்து கொண்டிருப்பார்கள். சிலர் ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் பல வகையான புத்தகங்கள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

Business Sales Techniques Books in Tamil:

1. The Ultimate Sales Machine – Chet Holmes

The Ultimate Sales Machine - Chet Holmes

இந்த புத்தகத்தில் மேலாண்மை, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதை பற்றிய யோசனைகளை வழங்குகிறது. வெற்றி பெற விரும்பும் விற்பனை மேலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கலாம்.

2. விற்பனையில் வெற்றி – Brian Tracy

விற்பனையில் வெற்றி - Brian Tracy

இந்த புத்தகத்தில் அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்வதற்காகவும், அவற்றை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள “விற்பனையில் வெற்றி” எனும் இந்நூலில், விற்பனைத் தொழிலில் நீங்கள் வெற்றிக் கொடி நாட்டுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 வணிக யோசனைகளை இந்நூலில் கூறியுள்ளார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்கள் Bank Officer ஆக எந்த புத்தகம் படிக்கணும் தெரியுமா?

3. SPIN Selling – Neil Rackham

SPIN Selling - Neil Rackham

ராக்ஹாம் அவர்கள் எழுதிய இந்த அற்புதமான புத்தகம் அதிக மதிப்புள்ள தயாரிப்பு மற்றும் சேவைகளை விற்பது குறித்து ஆய்வு செய்யும் முதல் புத்தகமாகும்.இந்த புத்தகம் விற்பனை செய்வதில் அல்லது நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள எவருக்கும் அவசியமான புத்தகம் ஆகும்.

4. Super Sales – Success Formula

Super Sales - Success Formula

விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான புத்தகம் தான் இது. விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி.? இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன.? அவற்றை எப்படிக் கையாள்வது..? என்பது பற்றிய வணிக யோசனைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

5. Core Selling Skills – Les Giblin 

Core Selling Skills - Les Giblin

இந்த விற்பனை துறையில் அற்புதம் என்ற புத்தகமானது விற்பனையின் அடிப்படைகள் பற்றிய யோசைகளை கூறுகிறது. மக்களுக்கு எப்படி விற்க வேண்டும். தயாரிப்பு அறிவு எளிதில் பெறப்படும் டிஜிட்டல் யுகத்தில், விற்பனையைப் பெற மக்களைக் கையாளும் கலை போன்ற யோசனைகளை வழங்குகிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉  இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்..!

தொழில் தொடங்கும் அனைவருமே இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்..!

 

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 
Advertisement