Kavingar Vaali Books in Tamil
கவிஞர் வாலி அவர்கள் பல புகழ்பெற்ற திரைப்பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதியுள்ளார் என்று நமக்கு தெரியும். ஆனால் அவர் பல புத்தகங்கள் கூட எளிதியுள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா..! ஆம் நண்பர்களே கவிஞர் வாலி அவர்கள் பல தமிழ் புத்தகங்களை எளிதியுள்ளார். அவ்வாறு கவிஞர் வாலி அவர்கள் எழுதிய சில புத்தகங்களை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கவிஞர் வாலி அவர்கள் எழுதிய புத்தகங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கவிஞர் வாலி எழுதிய புத்தகங்கள்:
கவிஞர் வாலி 29 அக்டோபர் 1931- ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன் ஆகும். இவர் தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை ஆகும். இவர் 18 ஜூலை 2013-ஆம் ஆண்டு இறந்தார்.
1. கிருஷ்ணா விஜயம்:
கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட இந்த கிருஷ்ணா விஜயம் என்னும் நூல் ஜனவரி 1-ம் தேதி 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் மைய கருத்தாக கிருஷ்ணா பகவான் பூமிக்கு விஜயம் செய்ததை கவிஞர் வாலி தனக்கு உரிய பாணியில் கூறியுள்ளார்.
2. அவதார புருஷன்:
கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட இந்த அவதார புருஷன் என்னும் நூல் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலில் இராமாயணத்தை கவிதை நடையில் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.
3. நானும் இந்த நூற்றாண்டு:
கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட இந்த நானும் இந்த நூற்றாண்டு என்னும் நூல் 2017-ஆம் ஆண்டு வாலி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்=> இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்
4. நினைவு நாடாக்கள்:
கவிஞர் வாலி அவர்களால் 2016-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய தொடர்தான் இந்த நினைவு நாடாக்கள் ஆகும்.
5. பாண்டவர் பூமி:
கவிஞர் வாலியின் பழைய கதை புதிய நடை என்கின்ற புதிய முயற்சிதான் இந்த பாண்டவர் பூமி. இந்நூல் உரையிடைபட்ட செய்யுள் நடையாக உருவாகிய புகழ் பெற்ற படைப்பு ஆகும்.
இதையும் படியுங்கள்⇒ APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எது தெரியுமா
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். | BOOKS |