கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய புத்தகங்கள்..!

Advertisement

N. Muthukumar Books

பொதுநலம் பதிவின் அன்பு வாசகர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை ஒரு சிலர் வெளிக்காட்டுவார்கள். ஒரு சிலர் அதை வெளிப்படுத்தாமலேயே நாட்களை கழித்து விடுவார்கள். அதுபோல பிறக்கும் போதே குழந்தைக்கு எல்லா திறமையும் வந்துவிடாது. தாய் மற்றும் தந்தையின் வளர்ப்பில் தான் அந்த குழந்தையின் எதிர்காலமும் திறமையும் இருக்கிறது.

அதுபோல நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும், திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் தான் நா.முத்துக்குமார். அப்படி பிள்ளைகளை வளர்க்கும் விதத்தில் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்தவர் கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள். இவர் எழுதிய புத்தகங்களை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய புத்தகங்கள்: 

அணிலாடும் முன்றில்:

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை முத்துக்குமார் அவர்கள் இந்த நூலில் கூறியுள்ளார். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது என்றும் உறவு என்னும் விழுதுகளை தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் அன்பு மட்டும் தான் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிராமம் நகரம் மாநகரம்:

கிராமம் நகரம் மாநகரம்

இந்த புத்தகத்தில் கிராமம் நகரம் மாநகரம் என்ற இடங்களில் வாழும் மனிதர்கள் சிறுமிகள், சிறுவர்கள் இவர்களின் நிகழ்வுகள் அனைத்தையும் நினைவுகூறும் வகையில் இந்நூலை எழுதியுள்ளார்.

கவிஞர் நா முத்துக்குமார் பற்றிய வரலாறு..!

குழந்தைகள் நிறைந்த வீடு:

குழந்தைகள் நிறைந்த வீடு

காவிய நிகழ்வுகளும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துரும்பின் மீதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும், கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்புக் கற்பனையும், தனது வாழ்வின் அனுபவக் கிடங்கிலிருந்து தனக்கான கவிதை மொழியினைக் கண்டுபிடிக்கும் முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள் தான் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டாம்பூச்சி விற்பவன்:

பட்டாம்பூச்சி விற்பவன்

1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்காக பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசை இந்த புத்தகம் பெற்றது. இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள் தான் வரும்.

கவிஞர் வைரமுத்து எழுதிய புத்தகங்கள்..!

என்னைச் சந்திக்க கனவில் வராதே:

என்னைச் சந்திக்க கனவில் வராதே

காதலும் காற்றும் தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம்,மொழி,தேசம் கடந்து காதல் தன் கால் தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டு விட்டுச் செல்கிறது என்ற ஜப்பான் தேச கவிஞர்களின் காதல் கவிதைகள் தான் இது.
இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார் நா. முத்துக்குமார் அவர்கள்.

இதையும் படியுங்கள்⇒ இந்த புத்தகத்தை படிக்காமல் இருக்காதீர்கள்..! சிறந்த 10 புத்தகத்தின் பட்டியல்..!

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 
Advertisement