Sahitya Akademi Award Winning Books in Tamil
பொதுவாக ஒரு சிலருக்கு புத்தகங்கள் படிப்பது தான் மிக பிடித்த ஒரு பொழுது போக்காக உள்ளது. அப்படி புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் படிக்கின்ற புத்தகங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதாவது தனக்கு மிக பிடித்த புத்தகத்தை யார் எழுதியது அதற்கு ஏதாவது விருது பெற்றுள்ளதா என்பதை பற்றியெல்லாம் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள்.
அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் சாகித்திய அகாதமி விருது பெற்ற 5 தலை சிறந்த தமிழ் புத்தகங்கள் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் உங்களுக்கு பிடித்த புத்தகம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Sahitya Akademi Award Winning Tamil Books in Tamil:
1. கல்கியின் அலை ஓசை:
கலக்கி அவர்களால் எழுதப்பட்ட அலை ஓசை (நாவல்) 1956 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இந்த நாவலின் கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. அதாவது சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் போது பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று இந்த நாவலில் கூறப்படுகின்றது.
2. சில நேரங்களில் சில மனிதர்கள்:
ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பட்ட சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் 1972 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இந்த நாவலின் மைய கருத்து ஓர் பெண்ணின் ஏமாற்றம், எழுச்சி, காதல், வலி, சோகம் போன்றவை சில நேரங்களில் சில மனிதர்களால் எடுக்கப்படும் முடிவுகளால் தான் ஏற்படுகின்றது என்பதை கூறுகின்றது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கவிஞர் வாலி எழுதிய புத்தகங்கள்
3. குருதிப்புனல்:
குருதிப்புனல் (Kuruthipunal) என்பது இந்திரா பார்த்த சாரதியால் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதின நூலாகும். இது 1977 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இந்த நாவல் 1968 இல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இடம் பெற்ற கீழ்வெண்மணிப் படுகொலைகளை மையமாகக் கொண்ட ஒரு புரட்சிப் புதினம் ஆகும்.
4. சேரமான் காதலி:
கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்ட இந்த நாவல் 1980 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. அதாவது கி.பி. 798-இல் பட்டத்துக்கு வந்த மூன்றாம் சேரமான் 834-இல் தான் மெக்காவுக்குப் போகிறார். அவரது 36 ஆண்டு ஆட்சியை தான் கதைப் போக்குக்காகச் சுருக்கிக் இந்த நாவல் கூறுகின்றது.
5. கள்ளிக்காட்டு இதிகாசம்:
கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ் பெற்ற நாவலான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 2003-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இன்றைய தேனி மாவட்டத்தின் வைகை அணை கட்டப்பட்ட போது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் வாழ்வியல் தான் கள்ளிக்காட்டு இதிகாச நாவலின் மைய கதை ஆகும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். | BOOKS |