வைரமுத்து எழுதிய புத்தகங்கள்
தமிழின் பெருமையை கூற வேண்டும் என்றால். இந்த ஒரு ஜென்மம் போதாது என்ற நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு மற்ற மொழியினை காட்டிலும் தமிழ் தனக்கான ஒரு இடத்தை பெற்றுள்ளது. இப்படிப்பட்ட தமிழில் நிறைய புத்தகங்கள் நிறைய சிறப்பு மிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று கவிப்பேரரசும் கவிஞருமான வைரமுத்து அவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி தான் பார்க்கபோகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Books Written by Vairamuthu in Tamil
கள்ளிக்காட்டு இதிகாசம்:
வைரமுத்து அவர்கள் எழுதிய புத்தகங்களில் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புத்தகமும் ஒன்றாகும். இந்த புத்தகமானது ஒரு மனிதன் அரசிடம் எந்த விதமான ஆதரவு பெறாமலும் மற்றும் இறைவனிடமும் எந்த விதமான ஆதரவும் பெறாமல் வாழ்கின்ற ஒரு மனிதனுடைய வாழ்க்கையினை மையமாக குறிக்கிறது.
இந்த கள்ளிக்காட்டு இதிகாச புத்தகத்திற்காக வைரமுத்து அவர்கள் சாகித்ய அகாடமி விருதினை பெற்றுள்ளார்.
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்:
இரண்டாவதாக நாம் பார்க்கப்போகும் புத்தகம் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் என்ற புத்தகமாகும். இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கவிதைகள் அனைத்தும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வானம் எப்படி விரிந்து மிகவும் அழகாகவும் மற்றும் பரந்தும் காணப்படுகிறது அதனை போலவே இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தமிழாற்றுப்படை:
தமிழ் மூவாயிரம் பெருமைகளை கொண்டுள்ளது என்று பெருமையாக கூறப்படுகிறது. அத்தகைய பெருமையினை ஒரு புத்தகமாக எழுதி அதற்கு தமிழாற்றுப்படை என்ற பெயரினை வைத்துள்ளார். மேலும் இந்த புத்தகம் தமிழின் மீது பற்று உள்ள அனைவரருக்கும் ஒரு திருப்தியை அளிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
APJ அப்துல் கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்…! |
இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்:
ஒரு மனிதனின் மனதை கூறும் வகையில் இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் புத்தகம் அமைந்துள்ளது. ஏனென்றால் ஒரு மனிதன் மகிழ்ச்சி, துன்பம், வெற்றி, துன்பம், தடுமாற்றம் இதுமாதிரி பல வகையான உணர்ச்சிகளோடு தான் குளத்தில் கல்லினை எரிகிறார்கள். இப்படிப்பட்ட குணங்களை மையமாக கொண்டு இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் புத்தகம் எழுதப்பட்டது.
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல:
கடைசியாக நாம் பார்க்கப்போகும் புத்தகம் இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல புத்தகமாகும். இந்த புத்தகத்தில் வைரமுத்து அவர்கள் மனிதர்கள் இந்த சமூகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையினை ஒரு படமாக கூறும் வகையில் எழுதியிருக்கிறார்.
இதையும் படியுங்கள்⇒ இந்த புத்தகத்தை படிக்காமல் இருக்காதீர்கள்..! சிறந்த 10 புத்தகத்தின் பட்டியல்..!
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். | BOOKS |