வீட்டில் இருந்தபடியே பத்தாயிரம் என்ன 20,000 ரூபாய் சம்பாதிக்க அருமையான தொழில் இதாங்க..!

10000 business ideas in tamil

 எளிய முறையில் வருமானம் ஈட்ட ஈசியானா ஒரு சுயதொழில்

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இரண்டு பேரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமான முறையில் நடத்த முடியும். முன்பெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை செய்வதா..! என்று யோசிப்பார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் பெண்கள் அப்படி நினைப்பது இல்லை. ஆண்களுக்கு சமமாகவே வெளியில் சென்று வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சில பெண்கள் தங்கள் குடும்ப சூழ்நிலைகளால் வெளியில் சென்று வேலை செய்து வருமானம் ஈட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கானது தான் இந்த பதிவு. அதாவது வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் மீன் வளர்த்து வருமானம் ஈட்டுவது எப்படி என்று பார்ப்போம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

சுயதொழில் தொடங்குவது எப்படி..?

நம்மிடம் பணம் இல்லாத காரணத்தினால் நம்மால் எப்படி தொழில் தொடங்க முடியும் என்ற கவலை நம்மில் பலபேருக்கு இருக்கும். சுயதொழில் தொடங்குவோர் அவ்வாறு கவலை பட தேவை இல்லை. காரணம் குறைந்த மற்றும் அதிக முதலீட்டிலும் அதிக லாபம் தரக்கூடிய தொழில்கள் நிறைய உள்ளது. அதில் ஒன்றை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மொட்டை மாடியில் மீன் வளர்ப்பு:

மொட்டை மாடியில் மீன் பொதுவாக மீன்களை வளர்ப்பவர்கள் அதிக செலவு செய்து குளம், ஏறி போன்ற இடங்களில் மீன்களை வளர்ப்பார்கள். ஆனால் நாம் அதிக செலவு செய்யாமல் வீட்டு மொட்டை மாடியிலேயே மீன்களை வளர்க்கலாம்.

அதோடு மட்டுமல்லாமல் அதிக லாபம் தரும் மீன்களை ஏறி, குளங்களில் வளர்ப்பதுபோல வீட்டின் மொட்டை மாடியிலும் அதிக லாபம் தரும் மீன்களை நம்மால் வளர்க்க முடியும். அதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம் வாங்க.

மாடியில் மீன் வளர்ப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • மீன் வளர்ப்பு தொட்டி
  • ஆக்ஸிஜன் குழாய்
  • உணவு துகள்களை அகற்றுவதற்கான சாதனம்
  • நீர் சுழற்சி பம்ப்

காலங்கள் ஆனாலும் என்றும் நிலைத்து நின்று மாதம் 10,000 ரூபாய் வருமானம் தரும் தொழில் 

முதலீடு:

மீன் வளர்ப்பதற்கு என்று ஒரு வாரம் பயிற்சி சென்றால் போதும் மீன் வளர்ப்பது பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம். மூன்று லட்சம் ரூபாயை வைத்து எளிமையான முறையில் எப்படி மீன் வளர்ப்பு  தொடங்குவது என்று பார்ப்போம். அப்படி என்றால் இதற்கு 3,00,000 ரூபாய் தோராயமாக தேவைப்படும்.

மீன் வளர்க்கும் முறை:

 மீன் வளர்க்கும் முறை

பதினைந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு தொட்டியில் ஆயிரம் மீன்கள் வரை வளர்க்கலாம். தொட்டியில் இருந்து மீன்கள் கீழே துள்ளி குதிக்காமல் இருக்க பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் இருந்தால் போதும். மீன் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரை சுத்தம் செய்யும் போது அவற்றை கீழே விடாமல் விவசாய நிலத்திற்கு பாய்த்துக்கொள்ளலாம். 

மேலும் இது விவசாய நிலத்திற்கு உரமாகவும்  பயனளிக்கிறது. ஒவ்வொரு மீனையும்  முந்நூற்று ஐம்பது ரூபாய் வரை விற்கலாம். மீன்குஞ்சிகளிலிருந்து பெரிய மீனாக வளரும் வரை அவற்றிற்கு ஒன்றரை கிலோ உணவு தேவைபடும்.

இதற்கு மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். இவ்வாறு வீட்டிலேயே மீன் வளர்த்தால் அவற்றை உபரி மீன்களாகவும் அல்லது சந்தைகளிலும் விற்று அதிக லாபம் பெற முடியும்.

மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil