தினமும் வருமானம் தரும் தொழில்
பல பேர் பிடிக்காமல் தான் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கிடைத்த வேலையை செய்கின்றனர். சுயதொழில் என்ன செய்யலாம் என்று யோசித்தி கொண்டிருப்பார்கள். யோசித்தால் மட்டும் போதாது நீங்கள் யோசிக்கின்ற தொழில் ஆனது எதிர்காலத்தில் அதனுடைய தேவை அதிகமாக உள்ளதாக இருக்க வேண்டும். சில நபர்களுக்கு யோசனை நன்றாக தான் இருக்கும், ஆனால் அதற்கான முதலீடு இருக்காது. அதனால் தான் இந்த பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி அறிந்த கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
கோழி பண்ணை தொழில்:
கோழி வளர்க்கும் தொழிலை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த தொழில் இப்போ மட்டுமில்லை எப்போதும் Demand உள்ள தொழில் ஆக இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை, உங்கள் வீட்டிலேயே பின்புறம் அல்லது முன்புறத்தில் சிறிய இடம் இருந்தால் போதுமானது. அதாவது கோழி தனியாக இருக்கின்ற அளவிற்கு சிறியதாக ஒரு கோழி குடாப் ஒன்று கட்டி கொள்ளவும்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கான மூலப்பொருள் என்று பார்த்தால் கோழிகள் தான். இதனை நீங்கள் மொத்தமாக வாங்க தேவையில்லை. முதலில் நீங்கள் ஆரம்பிக்கும் போது 2 கோழியை மட்டும் வாங்கி கொள்ளுங்கள்.
இல்லை உங்களிடம் ம்,முதலீடு இருக்கிறது என்றால் 20 கோழிகளை வாங்கி கொள்ளுங்கள். ஒரு கோழியின் விலை தோராயமாக 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நீங்கள் இரண்டு கோழிகள் தான் வாங்க போகிறீர்கள் என்றால் அதற்கு 600 ரூபாய் தேவைப்படும்.
அதுவே 20 கோழிகள் வாங்க போகிறீர்கள் என்றால் 6000 ரூபாய் தேவைப்படும்.
கிராமத்தில் இன்னும் 10 வருஷம் ஆனாலும் நஷ்டமே இல்லாமல் கொடிகட்டி பறக்கும் தொழில் இது தான்
வளர்ப்பு:
இதனை நீங்கள் கூண்டில் வைத்தே வளர்க்கலாம், இல்லையென்றால் கூண்டில் இருந்து வெளியே போக விட்டு மாலை நேரத்தில் அடைத்து விடலாம். இவை வெளியில் இருக்கும் பூச்சிகளை சாப்பிடும் அதுவே கூண்டில் வைத்து வளர்த்தால் அதற்கு உணவாக அரிசி தான் தேவைப்படும். எனவே நொய் அரிசியாக கொடுக்க வேண்டும்.
வருமானம்:
இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் நீங்கள் ஒரு கோழி வளர்க்கிறீர்கள் என்றால் அவை நிறைய கோழி குஞ்சு பொரிக்கும், அப்போ அந்த பெரிய கோழியை விற்று விடலாம். இதயம் மூலம் நீங்கள் வருமானத்தை பார்க்கலாம்.
அடுத்து கோழியின் முட்டையிலிருந்து வருமானத்தை பார்க்கலாம், அதாவது ஒரு முட்டையின் விலை 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்போ நீங்கள் ஒரு நாளைக்கு 10 முட்டையை விற்கிறீர்கள் என்றால் 100 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |