500 Rupees Side Business Ideas
இன்றைய காலகட்டத்தில் உள்ள செலவினங்களை சமாளிக்கவே போதும் போதும் என்றாகிவிடுகிறது. அந்த அளவிற்க்கு விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. இதனால் வரவுக்கு மிஞ்சிய செலவாக இருக்கிறது. இதனை சமாளிக்க வேலைக்கு சென்றால் மட்டும் போதாது என பலரும் சைடு பிசினெஸ், சுயதொழில் என ஏதேனும் ஒன்றை தொடங்க வேண்டும் என்று யோசித்து கொண்டு இருப்பார்கள். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் சூப்பரான சைடு பிசினெஸ் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Daily 500 Income Business in Tamil:
இக்காலத்தில் அனைவருமே அவசர அவசரமாக எழுந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு சாப்பிடக்கூட நேரம் இல்லமால் வேலைக்கும், கல்லூரிக்கும் செல்கிறோம். இவ்வாறு காலை உணவை தவிர்த்து விட்டு செல்பவர்கள் இக்காலத்தில் அதிகம். இதனால் கல்லூரிக்கு போகின்ற வழியிலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ இருக்கும் கூழ் கடையில் கூழ் வாங்கி ஒரு டம்ளர் குடித்து விட்டு செல்வார்கள்.
அதுமட்டுமில்லாமல் கேழ்வரகு கூழ் போன்ற ஆரோக்கியமான உணவுகளையே மக்கள் பெரிதும் தேடி விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இதனையே நாம் தொழிலாக எடுத்து செய்யும்போது உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் உங்களின் தொழிலும் வளர்ச்சி அடையும்.
கூழ் வகைகள்:
- கேழ்வரகு கூழ்
- கம்மங்கூழ்
- உளுந்து கூழ்
இதுபோன்று பல ஆரோக்கியமான கூழ் வகைகள் உள்ளது. எனவே நீங்கள் உங்களுக்கு விருப்பமான கூழ்களை தயார் செய்து தள்ளுவண்டி கடையிலோ அல்லது உங்களுக்கென நிரந்தரமான கடையிலோ விற்பனை செய்து வரலாம்.
இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும்.
அடுத்து இந்த தொழிலில் முக்கியமான ஒன்று என்னெவென்றால் நாம் தேர்வு செய்யும் இடம் தான். மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடத்தில தான் இத்தொழிலை செய்ய வேண்டும். அப்போது தான் நீங்கள் அதிக வருமானம் பெற முடியும்.
இந்த மெஷின் இருந்தா போதும்.! ஓகோன்னு தொழில் தொடங்கி ஒரு நாளைக்கு 2000 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்..!
கிடைக்கக்கூடிய வருமானம்:
இத்தொழிலில், வருமானம் என்பது நீங்கள் செய்யும் தொழிலின் அளவை பொருத்து கிடைக்கும். உதாரணமாக, ஒரு கூழின் விலை 25 ரூபாய் என கணக்கில் வைத்து கொள்வோம்.
ஒரு நாளைக்கு நீங்கள் குறைந்தபட்சம் 20 கூழ் விற்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 500 ரூபாய் வருமானமாக கிடைக்கும். அதுவே மாதத்திற்கு 15,000 ரூபாய் வ்ருமானமாக கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |