7000 Daily Income Business in Tamil
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருக்குமே நிதிதேவை என்பது அதிகமாகவே உள்ளது. அதனால் அதனை பூர்த்தி செய்வதற்காகவே அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் அருமையான மற்றும் எளிமையான ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Rose Milk Powder தயாரிக்கும் தொழில் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Rose Milk Powder தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!
வீட்டிலிருந்தே சம்பாதிக்க சுயதொழில்:
இன்றைய சூழலில் அனைவருமே தங்களது உணவு மிக மிக ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகவு கவனமாக இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதனால் நீங்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிக மிக பிடித்த ஒரு குளிர்பான வகையான Rose Milk Powder-யை நீங்கள் மிகவும் ஆரோக்கியமான முறையில் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
முதலீடு:
இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை தேவைப்படும்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பன்னீர் ரோஜா இதழ்கள், பீட்ரூட், சர்க்கரை, பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
4 மணிநேரம் வேலை செய்தால் போதும் தினமும் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பன்னீர் ரோஜா இதழ்களை நன்கு சுத்தம் செய்து விட்டு வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள்.
அதே போல் நாம் வாங்கி வைத்துள்ள பீட்ரூட்டையும் நன்கு சுத்தம் செய்து விட்டு அதனின் தோல்களை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நாம் காய வைத்து எடுத்து வைத்துள்ள பீட்ரூட், பன்னீர் ரோஜா இதழ்கள், சர்க்கரை, பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
தெனாவட்டாக உட்கார்ந்து கொண்டே தினமும் 30,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்
வருமானம்:
இந்த தொழிலை பொறுத்தவரையில் நீங்கள் எவ்வளவு அளவு Rose Milk Powder-யை விற்பனை செய்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களின் வருமானம் இருக்கும்.
இப்பொழுது தோராயமாக 1 கிலோ Rose Milk Powder-ன் விலை 700 ரூபாய் – 750 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ Rose Milk Powder-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 7,000 ரூபாய் – 7,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
கஷ்டப்படாம சொகுசா உட்கார்ந்து கொண்டே தினமும் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |