குறைந்த முதலீட்டில் வாங்கும் விற்கும் இந்த தொழிலை செய்தால் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Best Business Ideas With Low Investment in Tamil

இக்காலத்தில் சுயதொழில் தொடங்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகவும் கனவாக இருக்கிறது. இதனால் என்ன தொழில் தொடங்கலாம்.? எந்த தொழில் தொடங்கினால் நல்ல லாபம் பெறலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் யோசித்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க இப்பதிவில் சூப்பரான ஒரு சுயதொழில் ஐடியா பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இக்காலத்தில் Artificial Flowers- ஐ தான் அதிகமாக வாங்க விரும்புவார்கள். எனவே இதனையே நாம் வாங்கி விற்கும் தொழிலாக செய்தால் நல்ல வருமானம் பெறலாம். ஓகே வாருங்கள் இத்தொழில் பற்றிய மேலும் விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

How To Start Artificial Flower Business in Tamil:

How To Start Artificial Flower Business in Tamil

மார்க்கெட் மலர்கள் என்றால், சீசனுக்கேற்ப விலை ஏறும், இறங்கும். ஆனால் அந்தப் பிரச்னை செயற்கை மலர்களுக்கு இல்லை. அதுமட்டுமில்லாமல் இத்தொழிலில் அதிக போட்டியும் கிடையாது. அதனால் இத்தொழில் ஒரு சிறந்த தொழிலாக இருக்கிறது.

முதலில் Artificial Flowers பொருட்கள் எங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதை அறிந்து அங்கு சென்று மொத்தமாக வாங்கி வர வேண்டும்.

அதன் பிறகு உங்கள் தொழில் பற்றிய ஒரு விசிட்டிங் கார்டு தயார் செய்து உங்களுக்கு தெரிந்தவர்கள், உங்கள் பகுதியில் உள்ளவர்கள் என அனைவர்க்கும் கொடுக்க வேண்டும்.

தொழில் வாய்ப்புகள்:

மொத்தமாக இந்த Artificial Flowers- ஐ வாங்கி வந்து திருமணம், பிறந்தநாள் மற்றும் விழாக்களுக்கு இந்த செயற்கை மலர்களை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்க முடியும்.

தனியாக ஒரு கடை தொடங்கி தினமும் வியாபாரம் செய்தும் வரலாம் அல்லது ஆன்லைன் பிசினெஸ் மூலமாகவும் இத்தொழிலை செய்து வரலாம்.

இந்த தொழிலுக்கான மவுசு எப்போதுமே குறையாதுங்க.. மாதம் 60 ஆயிரம் அசால்ட்டா சம்பாதிக்கலாம்..!

தேவையான இடம்:

இத்தொழிலை நீங்கள் ஒரு கடை வைத்து தொடங்க விரும்பினால் மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்களில் தொடங்க வேண்டும். அதாவது, பேருந்து நிறுத்தம், சூப்பர் மார்க்கெட், கல்லூரி, மால் என மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்களில் தொடங்க வேண்டும்.

அல்லது நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆர்டர் எடுத்தோ செய்ய விரும்பினால் உங்கள் வீடுகளில் ஒரு பகுதி இடமாக தேவைப்படும்.

தேவையான முதலீடு:

Artificial Flowers- ல் நிறைய வகைகள் உள்ளது. அதாவது, நிறம், அளவு மற்றும் வடிவங்களின் அளவை பொறுத்து அதன் விலை மாறுபடும். எனவே உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்கும்போது உங்களுடைய முதலீடு என்பது மாறுபடும். எனவே இதற்கு உறுதியான முதலீடு எவ்வளவு என்பதை கணிக்க முடியாது.

இருப்பினும், உதாரணமாக நீங்கள் முதலில் குறைந்த அளவில் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் 20 ஆயிரம் வரை முதலீடு தேவைப்படும்.

கிடைக்கக்கூடிய வருமானம்:

தற்போது சந்தையில் Artificial Flowers குறைந்தபட்சம் ஆரம்ப விலையாக 200 ரூபாயிலிருந்து விற்கப்படுகிறது. எனவே நீங்கள் வாரத்திற்கு 50 Artificial Flowers-ஐ  விற்பனை செய்கிறீர்கள் என்றால் (50x 200=10,000) 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறலாம். எனவே மாதத்திற்கு 30 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்.

குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள வருமானம், முதலீடு மற்றும் பிற தகவல்கள் அனைத்தும் தோராய மதிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் நீங்கள் செய்யும் தொழில் அளவு மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து அனைத்தும் மாறுபடும். அதுமட்டுமில்லாமல் சுயதொழில் தொடங்குபவர்களுக்கான ஒரு வித ஐடியாக்களை தெரிவிப்பதற்காகவே இப்பதிவு.

மாதம் ஒரு ஆர்டர் எடுத்தால் போதும்.. 1 நாளைக்கு 3000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement