3000 Daily Income Business in Tamil
சொந்தமாக தொழில் தொடங்குவது என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது. எனவே நீங்களும் ஒரு சுயதொழில் தொடங்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் தொழில் தொடங்கும் முன் நன்கு யோசித்து அதன் பிறகு தொழில் தொடங்க வேண்டும். அதாவது இக்காலத்தில் எந்த தொழிலுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த தொழிலை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கான வருமானம் என்பது அதிகரித்து உங்கள் தொழில் வளர தொடங்கும். எனவே அப்படி ஒரு தொழிலை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
Best Daily Income Business in Tamil:
இப்பதிவில் சிறு குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம் தொழிலை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
தேவையான இடங்கள்:
இத்தொழிலை தொடங்க ஒரு சுத்தமான இடம் தேவைப்படும். மேலும், அந்த இடம் அதிக மக்க புழக்கம் இருக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்.
தேவையான மூலப்பொருட்கள்:
ஐஸ்கிரீம்களில் பல வகைகள் உள்ளது. அதாவது, வெண்ணிலா ஐஸ்கிரீம், சாக்லேட் ஐஸ்கிரீம், பிஸ்தா ஐஸ்கிரீம் இதுபோன்ற பல வகைகளில் ஐஸ்கிரீம்கள் கிடைக்கிறது. எனவே நீங்கள் தயாரிக்க விரும்பும் ஐஸ்கிரீம்களுக்கு ஏற்றவாறு மூலப்பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
தேவையான முதலீடு:
இத்தொழிலுக்கு கடை வாடகை, மூலப்பொருட்கள் மற்றும் முக்கியமாக ஐஸ்கிரீம் மெஷின் ஆகியவற்றிற்கு மொத்தமாக 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான முதலீடு தேவைப்படும்.
விற்பனை செய்யும் முறை:
நீங்கள் ஒருபுறம் கடைகளில் விற்பனை செய்து கொண்டு மறுபுறம் நீங்கள் ஒவ்வொரு ஊர் அல்லது திருவிழா நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களுக்கு சென்றும் விற்பனை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் அதிக லாபம் ஈட்ட முடியும்.
கிடைக்கக்கூடிய வருமானம்:
ஒவ்வொரு ஐஸ்கிரீமின் வகையை பொறுத்து அதன் விலை என்பது மாறுபடும். எனவே நீங்கள் உதாரணமாக நார்மல் ஐஸ்கிரீம் 30 ரூபாய் என கணக்கில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ஐஸ்கிரீம் விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3000 ரூபாய் வருமானமாக இருக்கும். ஆகவே, ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 90,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
குறிப்பு: இதில் கொடுக்கப்பட்டுள்ள முதலீடு மற்றும் வருமானம் நீங்கள் தொழில் தொடங்கும் அளவை பொருத்தும் விற்பனை செய்யும் அளவை பொருத்தும் மாறுபடும்.
மொத்தமாக 2 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |