எப்போதுமே demand உள்ள இந்த தொழிலை செய்ய ஆரம்பியுங்க..

Advertisement

Best Profitable Business in Tamilnadu in Tamil

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற யோசனை பலரிடம் இருக்கிறது. ஆனால் யோசனை பற்றி இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் செய்கின்ற தொழிலானது மக்கள் எப்பொழுதும் தேடுவார்களா, அதற்கான மவுஸ் குறையுமா என்று யோசித்து தொடங்க வேண்டும். அந்த வகையில் உங்களுக்கும் உதவும் வகையில் நிறைய சுயதொழிலை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

 என்ன தொழில் செய்வது: 

வீட்டில் அதிகமாக பயன்படுத்தப்படுத்தும் பொருளை தான்  நாம் கடையாக வைக்க போகிறோம். அதாவது வீட்டில் கப்போர்டு முதல் சமையல் அறை வரை பிளாஸ்டிக் பொருளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள்.

பிளாஸ்டிக் பொருள் வாங்குவதற்கும் குறைவாக உள்ளது, வீட்டை அழகாகவும் காட்டுகிறது. இதனால் தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த தொழிலை தாரளமாக செய்யலாம்.

இடம்:

 என்ன தொழில் செய்வது

இந்த தொழிலை தொடங்குவதற்கு மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றிற்கு பக்கத்தில் உள்ளவாறு வைக்க வேண்டும்.

நேரம் சரியில்லன்னு சொல்லாம இந்த தொழிலை செய்யுங்க

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழில் செய்வதற்கு மூலப்பொருட்களாக பிளாஸ்டிக் பொருட்கள் தேவைப்படும். இதனை மொத்தமாக கிடைக்கும் இடம் அல்லது தயாரிக்கும் இடத்தில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும்.

வீட்டில் பயன்படுத்தும் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் வாங்கி கொள்ள வேண்டும். சிறியது முதல் பெரியது வரை அனைத்தயும் வாங்கி கொள்ள வேண்டும்.

பொருட்களை வாங்குவதற்கு 50,000 ரூபாய் தேவைபப்டும், உங்களிடம் சொந்த இடத்தில் கடை நீங்களே காட்டினீர்கள் வாடகை பிரச்சனை இருக்காது. அதுவே கடை இல்லையென்றால் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். இவை கடையை பொறுத்து வாடகை மாறுபடும்.

மாதந்தோறும் தோராயமாக 3000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.

வருமானம்:

இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் அன்றைய நாள் விற்பனையை பொறுத்து அமைகிறது. அதனால் தோராயமாக ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

இதுவே பெஸ்டிவல் நேரத்தில் விற்பனை அதிகமாக இருக்கும்.

1 கிளிக் செய்தால் போதும் இந்த தொழில் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement