இத்தொழிலில் ஆர்டர் எடுத்தால் மட்டும் போதும் மாதம் 30,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்..!

Advertisement

Broom Business Idea in Tamil

இக்காலத்தில் பணதேவை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. என்னதான் நாம் வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் சேமிப்பு என்பதே நம்மிடம் இருக்காது. ஏனெற்றால் அந்த அளவிற்கு இக்காலத்தில் விலைவாசி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைவருமே சுயதொழில் தொடங்க நல்லதொரு தொழிலை தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படி நீங்கள் தேடும் தொழிலானது அதிக டிமாண்ட் உள்ள தொழிலாகவும் என்று அழியாத தொழிலாகவும் இருப்பது என்பது மிகவும் அவசியம். அப்பொழுதுதான் நல்ல வருமானம் பெற முடியும். அப்படி ஒரு சூப்பரான தொழிலை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

How to Start Broom Making Business in Tamil:

How to Start Broom Making Business in Tamil

எந்த வீடாக இருந்தாலும் நாம் வீட்டை பெருகுவதற்கு வாருகோலை தான் பயன்படுத்துகிறோம். ஒரு வாருகோல் தேய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து விட்டு புதிய வாருகோலை வாங்குவோம். அப்படி ஒரு பட்சத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வாருகோலின் தேவை என்பது அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எனவே இதனையே நாம் தொழிலாக செய்தால் நல்ல வருமானம் பெறலாம். ஓகே வாருங்கள் அப்படி நீங்கள் இத்தொழிலை தொடங்க நினைத்தால் அதற்கான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

முதலீடு:

வாருகோலில் நிறைய வகைகள் உள்ளது. எனவே, நீங்கள் விற்பனை செய்யும் வாருகோலின் மாடலுக்கு ஏற்றவாறு உங்களுக்கு முதலீடு தொகை மாறுபடும். இருப்பினும், தோராயமாக 10 ஆயிரம் ரூபாய் முதலீடு இருந்தால் போதும் இத்தொழிலை நீங்கள் பெரிய அளவில் தொடங்கலாம். இதையே நீங்கள் பெரிய அளவில் தொடங்க வேண்டுமென்றால் அதிக முதலீடு தேவைப்படும்.

விளக்குமாறு வகைகள்:

  • பிளாஸ்டிக் விளக்குமாறு
  • தோகை விளக்குமாறு
  • ரப்பார் விளக்குமாறு
  • ஆங்கிள் விளக்குமாறு
  • தென்னை விளக்குமாறு

இதுபோன்ற நிறைய வகைகள் உள்ளது.

மாதந்தோறும் கிலோ கணக்கில் இல்லாமல் லிட்டர் கணக்கில் வருமானம் பெற இந்த தொழிலை செய்யுங்க..!

தேவையான இடம்:

இத்தொழிலை நீங்கள் வீட்டின் ஒரு சிறிய பகுதி இருந்தால் போதும் தொடங்கலாம் அல்லது ஒரு கடை தொடங்கி விற்பனை செய்ய விரும்பினால் மக்கள் அதிகமாக புழக்கம் உள்ள இடங்களில் ஒரு கடையை தொடங்கலாம்.

விற்பனை செய்ய கூடிய இடங்கள்:

முதலில், விளக்குமாறு எங்கு குறைவான விலையில் கிடைக்கிறதோ அங்கு சென்று மொத்தமாக வாங்கி கொள்ளுங்கள். இவ்வாறு வாங்குவதன் மூலம் உங்களின் முதலீடு தொகை குறியும்.

அடுத்து, இதனை உங்கள் பகுதியில் உள்ள கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஹாஸ்டல் மற்றும் நிறுவனங்கள் என விளக்குமாறு பயன்படுத்தும் அனைத்து பகுதியிலும் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.

கிடைக்கக்கூடிய வருமானம்:

உதாரணமாக, பெரும்பாலான மக்கள் விரும்பி வாங்க கூடிய நார்மல் வாருகோல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிகிறது.

எனவே நீங்கள் இதே விளக்குமாரை 20 ரூபாய் குறைத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்தால் கூட நல்ல வருமானம் பெறலாம். அதாவது, நீங்கள் ஒரு நாளைக்கு 10 வாருகோல் விற்பனை செய்தீர்கள் என்றால் 1000 ரூபாய் எளிதாக சம்பாதிக்கலாம். 

எனவே நீங்கள் மாதத்திற்கு 30,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள முதலீடு மற்றும் வருமானம் நீங்கள் தொடங்கும் தொழிலின் அளவை பொருத்தும் இடத்தை பொருத்தும் மாறுபடும்.

1 கிளிக் செய்தால் போதும் இந்த தொழில் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement