Browsing Center Business plan
பொதுவாக அனைவருக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நிறைய நபருக்கு மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்வதை சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இரண்டு உள்ளது. முதலில் பார்த்தால் சொந்தமாக தொழில் தொடங்குவதன் மூலம் நிறைய லாபத்தினை பார்க்கலாம். இத்தகைய தொழிலை வைத்து மற்ற 4 நபருக்கு வேலை கொடுக்கலாம். மற்றொரு காரணம் என்பது அதிக நேரம் உழைக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் நிறைய நேரம் அதில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் பார்த்தால் இந்த இரண்டிற்கும் ஏற்ற மாதிரியாக ஒரு அருமையான சுய தொழிலை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். அது வேறு ஒன்றும் இல்லை. Browsing Center தொழில் தான். எனவே இதனை பற்றிய முழு தகவலையும் இன்னும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
இன்டர்நெட் பிரவுசிங்:
பொதுவாக இன்றைய காலத்தில் அனைவரிடமும் மொபைல் இருந்தாலும் கூட இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் என்பதற்கு இன்னமும் நல்ல வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. ஆகையால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
மேலும் இந்த தொழிலை தொடங்க போகிறீர்கள் என்றால் இதற்கான இட அமைப்பு என்பது மிகவும் அவசியம். ஆகையால் நல்ல மக்கள் வரவேற்பு அதிகம் உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும்.
உங்களுக்கான மூலப்பொருட்களை வாங்கிய பிறகு இந்த தொழிலை செய்யலாம். இதில் நீங்கள் அப்ளை செய்யும் முறை மற்றும் ஜெராக்ஸ் என அனைத்தினையும் செய்யலாம்.
மூலப்பொருள் | முதலீடு:
- கம்ப்யூட்டர்- 2
- Key board- 2
- CPU- 2
- UPS- 1
- நாற்காலி- 2
- மின்சார வசதி
- மேசை- 1
- ஜெராக்ஸ் மிசின்
- மற்ற பேப்பர் மற்றும் பேனா
மேலே சொல்லப்பட்டுள்ள மூலப்பொருட்கள் அனைத்தும் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆகையால் ஆரம்பத்தில் இவை வைத்துக்கொண்டாலும் அதன் பிறகு நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு மற்ற அனைத்தினையும் வாங்கி கொள்ளலாம்.
அதேபோல் இந்த தொழிலை செய்வதற்கு அரசு ரீதியான ஆவணங்களை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
என்ன தொழில் செய்வது என்று யோசிக்காமல் இந்த தொழிலை செய்யுங்க..
தகுதி என்ன:
பிரவுசிங் சென்டர் தொழிலை தொடங்க விரும்பம் நபர்கள் கணினியினை பற்றிய தகவலை நன்றாக அறிந்து இருக்க வேண்டும். அதேபோல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக படிக்கும், எழுதும் திறன் இருத்தல் வேண்டும்.
ஒருவேளை இவை எல்லாம் உங்களுக்கு இல்லை என்றால் இத்தகைய திறமை வாய்ந்த நபரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்.
வருமானம் எவ்வளவு:
ஒரு நாளைக்கு நீங்கள் உங்களுடைய பிரவுசிங் சென்டர் கடையினை 2 அல்லது மூன்று மணி நேரம் திறந்து வைத்தால் போதும் 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை தோராயமாக சம்பாதித்து விடலாம்.
8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |