வீட்டிலிருந்தே 3 மணி நேரம் வேலை செய்து மாதம் ரூபாய் 22,500 சம்பாதிக்கலாம்…

Advertisement

மாதம் ரூபாய் 22,500 வரை சம்பாதிக்கலாம் 

வணக்கம் நண்பர்களே.! உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் தொழில்களை சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருந்து செய்ய கூடிய சிறந்த வேலை ஒன்றை பற்றி காண்போம். பெண்களுக்கு இருக்க கூடிய ஆசை ஒன்று தான் சுய சம்பாத்தியம். ஆனால் உங்களால் அலுவலகம் சென்று காலை 9 முதல் 5 மணி வரை வேலை செய்ய முடியவில்லையா, உங்களது பெற்றோர் மற்றும் குடும்பங்களுடனும் நேரத்தைச் செலவிட வேண்டுமா, அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேலைக்கு செல்வதால் ஓய்வு எடுக்கவே நேரம் இல்லையா. இதற்கெல்லாம் தீர்வாக தான் இந்த பதிவு, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்தால் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளலாம் நீங்கள் சுயமாக சம்பாரித்த மாதிரியும் இருக்கும். அதற்கு ஏற்ற வேலை தான் virtual Assistant job. வாருங்கள் இந்த வேலையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Business Idea Monthly Income 22,500:

virtual Assistant 

virtual Assistant என்றால் என்ன?

விர்ச்சுவல் அசிடண்ட் என்பது தொழில்முனைவோர் அல்லது ஏதோ ஒரு நிறுவனத்திற்கு நீங்கள் வீட்டில் இருந்தபடியே தகவல் தொடர்பு மூலம் பணி செய்வது குறிக்கிறது.

virtual Assistant-ன் பணி என்ன?

virtual Assistant -ஆன உங்கள் பணி, நிறுவனம் தொடர்பான தகவல்களை சேமிப்பதும் அவற்றை தேவைப்படும் போது பகிர்வதும் ஆகும். நிறுவனம் தொடர்பான தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பது, மின்னஞ்சலுக்கு பதிலளிப்பது மற்றும் Microsoft Excel போன்றவற்றில் நிறுவனத்திற்கு தேவையான சிறிய சிறிய வேலைகளை உங்கள் இருப்பிடத்தில் இருந்து செய்வதாகும்.

மாதம் தோறும் 10,000 ருபாய் சம்பாதிக்கலாம் அதுவும் வீட்டில் இருந்த படியே…!

virtual Assistant வேலைக்கு தேவையான பொருட்கள்?

இந்த வேலைக்கு உங்களுக்கு laptop மற்றும் net இருந்தால் போதும். பெரும்பாலான நிறுவனங்கள் இந்த பதவிக்கு அதிக கல்வித்தகுதியை எதிர்பார்ப்பதில்லை. குறைந்தபட்ச கணினியறிவு போதுமானது மற்றும் தெளிவாக பேசும் திறன் இருந்தால் போதும்.

virtual-assistant job

virtual Assistant  பணி நேரம்?  

தினமும் 3 முதல் 4 மணி நேரங்கள் மட்டுமே உங்களுக்கான பணிகள் இருக்கும்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க சிறந்த தொழில்கள்

virtual Assistant சம்பளம் எவ்வளவு ?

virtual Assistant -க்கு சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 150 முதல் ரூபாய் 280 வரை இந்தியாவில் வழங்கப்படுகிறது. இந்த தொகை நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தை பொறுத்து மாறும். ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 180 என்று கணக்கீட்டால் மாதம் ரூபாய் 25,000 வரை உங்கள் வருமானம் இருக்கும்.

virtual Assistant என்ற வேலை உங்களுக்கு பயனுள்ளதாகவும் நிறைய புதிய செய்திகளை தெரிந்துகொள்ள ஒரு தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் தளத்தை தொடர்ந்து பின்தொடருங்கள்..

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement