Business To Earn 1 Crore in a Year in Tamil
நாம் அனைவருமே ஏதோவொரு சுயதொழில் தொடங்கி அதில் அதிக லாபம் ஈட்டவேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் நாம் தொடங்கும் எல்லா தொழில்களும் நமக்கு லாபத்தை மட்டுமே அளிக்கும் என்று கூறமுடியாது. சில தொழில்களில் லாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். இருந்தாலும், லாபத்தை மட்டுமே தரக்கூடிய தொழிலாக நாம் தேர்வு செய்து தொடங்கினால் அதில் அதிக லாபத்தை பெற முடியாது. அதாவது இக்காலத்தில் அதிகமாக பயன்படும் தொழிலை தேர்வு செய்து தொழில் தொடங்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான என்றும் அழிவில்லாத தொழில் பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Start Goat Business in Tamil:

இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் ஆடு வளர்ப்பு தொழிலும் முன்னேறி வருகிறது. இதனால் உலகில் அதிக லாபம் ஈட்டும் தொழில்களில் ஆடு வளர்ப்பும் ஒன்றாக இருக்கிறது.
இறைச்சிகளில் அதிக புரோட்டீன் தருவது ஆட்டுக்கறி தான். இதனால் அதன் விலையும் மற்ற இறைச்சிகளை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் அதிகமாக இருந்தாலும் பெரும்பாலானோர் ஆட்டுக்கறியை தான் விரும்புவார்கள்.
அதுமட்டுமில்லாமல், வீட்டில் ஏதேனும் சுப நிகழ்ச்சி நடைக்கிறது என்றால் அங்கும் இந்த ஆட்டுக்கறிதான் முதலிடத்தில் இருக்கிறது.
இதனால் இதன் தேவையும் அதகிரித்து கொண்டே வருகிறது. எனவே இதனையே நாம் தொழிலாக செய்யும்போது அதிக லாபத்தை பெறலாம். ஓகே வாருங்கள் ஆடு வளர்ப்பு தொழில் பற்றிய சில விகாரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
தேவையான இடம்:
ஒரு ஆடு வளர்ப்பதற்கு 12 சதுர அடி தேவைப்படும். எனவே நீங்கள் எவ்வளவு ஆடு வளர்க்க விரும்புகிறீர்களோ அதற்கேற்றவாறு இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். முக்கியமாக அந்த இடம் நீர் வசதியுள்ள இடமாகவும் விவசாய நிலமாகவும் இருக்க வேண்டும்.
இந்த தொழிலுக்கான மவுசு எப்போதுமே குறையாதுங்க.. மாதம் 60 ஆயிரம் அசால்ட்டா சம்பாதிக்கலாம்..!
அரசு கடன் உதவி:
ஒரு விவசாயி அல்லது வேலையில்லாத இளைஞர்கள் 20 ஆடுகளை வளர்க்க விரும்பினால், அவர்கள் அரசிடம் கடன் மற்றும் மானியம் பெறலாம். எனவே இதற்கான விவரங்களை தெரிந்து கொண்டு கடன் அரசிடம் கடன் உதவியை பெறலாம்.
ஆடு வளர்ப்பு தொழிலில் எப்படி அதிக வருமானம் பெறுவது.?
ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும் போதும், தற்போதைய நிலையில் ஆடு மொத்த விலையில் கிலோ ரூ.250 தாராளமாக போகிறது. எனவே ஒரு ஆட்டை ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்ய முடியும். அப்படியென்றால் ஒரு வருடத்தில் 500 ஆடுகள் மூலம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ஆடுகள் வரை உற்பத்தி செய்ய முடிகிறது.
எனவே, ஒரு ஆட்டை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் கூட ஆண்டுக்கு 1,20,00,000 ரூபாய் வருமானம் பெறலாம் (3,000x 4,000=1,20,00,000). ஆகவே ஆடு வளர்ப்பு தொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவு என அனைத்தயும் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட குறைந்தபட்சம் 80 லட்சம் வரை லாபம் கிடக்கும்.
குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள வருமானம், முதலீடு மற்றும் பிற தகவல்கள் அனைத்தும் தோராய மதிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் நீங்கள் செய்யும் தொழில் அளவு மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து அனைத்தும் மாறுபடும். அதுமட்டுமில்லாமல் சுயதொழில் தொடங்குபவர்களுக்கான ஒரு வித ஐடியாக்களை தெரிவிப்பதற்காகவே இப்பதிவு.
மாதம் ஒரு ஆர்டர் எடுத்தால் போதும்.. 1 நாளைக்கு 3000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்..!
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |














