Chapati Making Machine for Small Business
பொதுவாக பெருமைப்பாலோனருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை செய்து முன்னரே வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதற்கு மூலப்பொருளாக இருப்பது பணம் மட்டும் தான். அத்தகைய பணத்தை பெறுவதற்கு நாம் கண்டிப்பாக மாத சம்பத்திற்கு வேலை பார்க்க வேண்டும், அப்படி இல்லை என்றால் சொந்தமாக எதாவது தொழில் தொடங்க வேண்டும். இந்த இரண்டிற்குமே உங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
அதுவே உங்களது திறமையை ஒரு சுயதொழில் தொடங்குவதற்கு நீங்கள் செலுத்தினால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான வருமத்தை பெற முடியும். ஆக அப்படிப்பட்ட ஒரு அருமையான சுயதொழிலை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்வத்தினால் உணவகங்களுக்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆக நாம் செய்யக்கூடிய தொழில் உணவகங்களோடு தொடர்புடையதாக இருந்தால் அது ஒரு சரியான தேர்வாக இருக்கும். ஏனென்றால் ஒரு சரியான தொழிலை தேர்வு செய்வது என்பது பத்தி வெற்றிக்கு சமம் என்று தான் சொல்ல வேண்டும்.
நாம் பார்க்க இருக்கும் பதிவும் உணவுகளோடு தொடர்புடைய ஒரு தொழிலை தொடங்குவது பற்றித்தான். உணவகங்களில் மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று சப்பாத்திக்கு மாவு பிசைவது மற்றும் தேய்ப்பது. அந்த கடினமான வேலையை நாம் ஒரு தொழிலாக மாற்றி அதன் மூலம் லாபம் பெறுவது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.
கடினமான வேலை என்றாலும் அதற்கென்று இருக்கும் இயந்திரத்தை வாங்கினால் அந்த வேலையையும் நாம் மிக சுலபமாக செய்துவிடலாம்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
தினமும் இரண்டு மணி நேரம் வேலை! வாரம் 10,000 ரூபாய் லாபம்..! அருமையான குடிசை தொழில்..!
மூலப்பொருட்கள்:
- கோதுமை மாவு
- உப்பு
- தண்ணீர்
- சப்பாத்தி தேய்க்கும் இயந்திரம்
முதலீடு:
சப்பாத்தி தேய்க்கும் இயந்திரம் தவிர முதுமை மாவு மட்டுமே மிக முக்கியமான மூலப்பொருள். அதற்கு முதலீடாக அதிகபட்சம் 2000 ரூபாய் இருந்தால் போதும்.
இயந்திரம்:
சம்பாதி தேய்க்கும் இயந்திரம் பொறுத்தவரை இரண்டு வகைகளில் உள்ளது. அவை ஆட்டோமேட்டிக் இயந்திரம் இதனுடைய விலை 60 ஆயிரம் ஆகும். மற்றொன்று மென்வல் இயந்திரம் இதனுடைய விலை 1000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.
இடம்:
இந்த தொழிலை தொடங்க பெரிய அளவில் இடம் தேவைப்படாது. 10 X 10 இடம் இருந்தாலே போதுமானது. மேலும் வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயந்திரத்தை இயக்க நீங்கள் ஒருவரே போதும்.
சப்பாத்தி தயார் செய்யும் முறை:
சப்பாத்தி மாவை பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளை உருட்டி மென்வல் இயந்திரத்தில் வைத்து அழுத்தினால் போதும் சப்பாத்தி ரெடியாகிவிடும். இதனை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
விற்பனை செய்யும் முறை:
தயார் செய்த சப்பாத்திகளை அருகில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யலாம். இது தவிர சமையல் கலைக்கர்களிடம் தொடர்பு கொண்டு விசேஷங்களுக்கு தயார் செய்து கொடுக்கலாம்.
வருமானம்:
ஒரு உணவகத்தில் ஒரு நாளுக்கு குறைந்தது 100 சப்பாத்தியாவது விற்பனையாகும். ஆக தினமும் ஒரு 10 உணவகங்களில் ஆர்டர் எடுத்து 1000 சப்பாத்திகள் விற்பனை செய்தால் போதும்.
ஒருகிலோ சப்பாத்தி மாவில் 20 சப்பாத்தி முதல் 25 சப்பாத்திகள் தயாரா செய்யமுடியும். ஆக 1000 சப்பாத்திகள் தயார் செய்வதற்கு நமக்கு 40 கிலோ கோதுமை மாவு தேவைப்படும்.
தோராயமாக ஒரு கிலோ கோதுமை மாவு 50 ரூபாய் என்றால் 40 கிலோ கோதுமை மாவு வாங்க 2000 ரூபாய் தேவைப்படும்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
ரிபேக்கிங் பிசினஸ் வாங்கும் விலை 100 ரூபாய் விற்கும் விலை 500 ரூபாய்..!
உற்பத்தி செலவு:
ஒரு சப்பாத்தி தயார் செய்வதற்கு தோராயமாக இரண்டு ரூபாய் ஆகும். அதனை உணவகங்களில் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு சப்பாத்தியில் உற்பத்தி செலவு 2 ரூபாய் போக 5 ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஆக ஒரு நாளுக்கு 1000 சப்பாத்திகளை விற்பனை செய்தால் 5000 ரூபாய் சம்பாதிக்க முடியும். மொத்தமாக ஒரு மாதத்திற்கு 1.50 லட்சம் வருமானம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |