Coaching Center Business Plan
வாழ்க்கையில் முன்னேற என்ன தொழில் செய்வது என்று யோசித்து கொண்டே இருந்தால் வருடங்கள் தான் ஓடிக்கொண்டே போகுமே தவிர வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் போய்விடும். அதனால் வாழ்க்கையில் நாம் அடுத்தகட்ட நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் ஏதோ ஒரு தொழிலை செய்ய வேண்டும். இத்தகைய முறையில் எண்ணற்ற தொழில் வகைகள் உள்ளது. ஆனால் அத்தகைய தொழில்களின் விவரங்கள் தான் நமக்கு தெரியமலே இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் மிகவும் குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் அது என்ன தொழில் எப்படி அதை செய்வது என்ற முழு தகவலையும் பார்க்கலாம்..!
என்ன தொழில்:
இன்றைய காலகட்டத்தில் அனைத்தையும் விட முன்னிலையில் இருப்பது கல்வி ஒன்று மட்டுமே. அதனால் இத்தகைய கல்வியினை வைத்து செய்யக்கூடிய தொழில்கள் நிறைய உள்ளது. அதில் ஒன்றாக Coaching Center Business-ம் உள்ளது.
இந்த தொழிலுக்கு தற்போது டிமாண்ட் என்பது அதிகமாக உள்ளது. ஏனென்றால் பெரும்பாலான நபர்கள் அரசு சார்ந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதால் Coaching Center-றில் பயிற்சி பெற தொடங்குகிறார்கள். ஆகையால் இந்த தொழில் நீங்கள் நல்ல வருமானம் பெறலாம்.
மூலப்பொருள் என்னென்ன:
நீங்கள் இத்தகைய தொழிலை தொடங்க வேண்டும் என்றால் நன்றாக கல்வி அறிவு பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த 2 ஆசிரியர்கள் தேவை. ஏனென்றால் கல்வி என்பது புனிதமான ஒன்றாக இருப்பதால் இதனை அனுபவம் வாய்ந்த நபர்கள் கற்றுவதே நல்லது.
இவை இல்லாமல் போர்டு, சாக்பீஸ் மற்றும் கோச்சிங்கிற்கு தேவையான புத்தகங்களும் மூலப்பொருளாக வேண்டும்.
தேவையான இடம்:
Coaching Center Business-ஐ நீங்கள் செய்ய வேண்டும் என்றால் 2 வகுப்பறைகள் முக்கியமாக தேவைப்படுகிறது. மேலும் அது மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடமாக இருக்க வேண்டும்.
3 மணிநேரம் வேலை செய்தால் போதும் அசால்ட்டா 4,000 ரூபாய் சம்பாதிக்கலாம்
முதலீடு எவ்வளவு:
இத்தகைய தொழிலை செய்வதற்கு ஆரம்ப முதலீடாக நீங்கள் 50,000 ரூபாய்க்கு மேல் 1,00,000 ரூபாய்க்குள் கையில் வைத்து கொள்ள வேண்டும்.
How to Start Coaching Centre:
முதலில் நீங்கள் கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் அதற்கு நிலையான பெயரை வைத்து பின்பு சிறிய விளம்பரம் கொடுக்க வேண்டும். அதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த முடித்தால் போதும் உங்களுடைய கோச்சிங் சென்டருக்கு மாணவர்கள் வர ஆரம்பித்து விடுவார்கள்.
இத்தகைய முறையினை செய்து விட்டு நீங்கள் இந்த தொழிலை ஆரம்பித்து விடலாம். மேலும் நீங்கள் கோச்சிங் கொடுத்த மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் இன்னும் அதிகமாக மாணவர்கள் சேர ஆரம்பித்து விடுவார்கள்.
தொழிலுக்கான நேரம்:
நீங்கள் இந்த தொழிலை தினமும் 2 அல்லது 3 மணி நேரம், வாரம் 1 நாட்கள் என எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.
8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்
வருமானம்:
இதில் தினமும் நீங்கள் 2 மணி நேரம் என்று பார்த்தாலும் கூட மாதத்திற்கு ஒரு நபருக்கு மட்டும் 6,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த தொழிலை பொறுத்தவரை நபர்களின் எண்ணிகையினை பொறுத்து வருமானம் என்பது அமையும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |