Current Trending Business in Tamil
இந்த உலகிற்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பணம் தான் இன்றைய காலகட்டத்தில் மனிதனை ஆட்சி செய்கிறது என்றே கூறவேண்டும். ஏனென்றால் பணம் தான் இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் முதன்மையாக உள்ளது அதனால் மனிதர்கள் அனைவைருமே பணத்தை சம்பாதிக்க ஓடி ஓடி உழைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு மற்றவர்களிடம் வேலை செய்வதைவிட சுயமாக ஏதாவது ஒரு சுயதொழில் செய்வது மிக மிக பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் மாதம் 20,000 ரூபாய் வருமானம் அளிக்கும் ஒரு தொழில் பற்றி முழுதாக பார்க்க இருக்கின்றோம். என்னவென இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன தொழில் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
லாபகரமான சிறு தொழில்:
நாம் அனைவருக்குமே தங்களது வாழ்க்கையில் பலவகையான கடமைகள் இருக்கும் அவற்றை எல்லாம் நிறைவேற்ற இன்றைய சூழலில் முதன்மையாக தேவைப்படுவது பணம் தான்.
அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பணத்தை நாம் சம்பாதிக்க உதவும் ஒரு அசத்தலான தொழில் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
என்ன தொழில்..?
அது என்ன தொழில் என்றால் கம்ப்யூட்டர் பயிற்சி சென்டர் தொழில் தான். இந்த தொழிலுக்கான Demand இன்றைய சூழலிலும் அதிக அளவு காணப்படுகிறது. அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கினால் அதிக அளவு லாபம் பார்க்கலாம்.
இந்த தொழிலுக்கு எப்போதும் Demand அதிகம் தான் அதனால் உடனடியாக இதனை தொடங்குங்க
தொழில் தொடங்கும் முறை:
இந்த தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் இந்த தொழிலை செய்வதை அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும். அதன் பிறகு மற்ற பயிற்சி சென்டர்களை காட்டிலும் நீங்கள் அதிக தகவல்களை (Course) கற்று தரவேண்டும்.
அதைபோல் குறைந்த கட்டணமாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க தெரியவில்லை என்றாலும் அதை நன்கு கற்று அறிந்து கொண்டவர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழில் செய்வதற்கு முக்கியமாக தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கம்ப்யூட்டர் தான். மேலும் இதற்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 50,000 முதல் 1,00,000 ஆகும்.
பெண்களுக்கு பிடித்த இந்த பொருளை விற்றால் நல்ல லாபம் பார்க்க முடியும்
தேவையான இடம்:
இந்த தொழிலை நீங்கள் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு அருகில் தொடங்கினால் அதிக அளவு மாணவ மாணவிகள் உங்களிடம் வந்து சேர்ந்து பயிற்சி பெறுவார்கள். அவர்கள் மற்றவர்களிடம் கூறி அவர்களையும் உங்களின் பயிற்சி நிலையத்தில் சேர சொல்லுவார்கள்.
வருமானம்:
இந்த தொழிலின் வருமானம் என்பது உங்களிடம் எவ்வளவு பேர் பயிற்சி பெறுகிறார்கள் அவர்கள் எந்த மாதிரியான Course-யை கற்று கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மாறுபடும்.
இதில் உங்களுக்கு தோராயமாக 1 மாதத்திற்கு 20,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இத்தொழிலில் ஆர்டர் எடுத்தால் மட்டும் போதும் மாதம் 30,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |