Monthly 20000 Income Business in Tamil
இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதார பிரச்சனையை சமாளிக்க வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாக இருப்பது பணம் தான். இந்த பணத்தை தனியாரிடம் வேலை செய்து சம்மதிக்கிறார்கள். ஆனால் காலம் முழுவதும் தனியாரிடம் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். தாமாக சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Daily Income Business in India:
இன்றைய பதிவில் பார்க்க கூடிய தொழில் மக்களிடம் எப்பொழுதும் அதற்கான தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். அதாவது சைக்கிள் மற்றும் வண்டி ஸ்டாண்ட் தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள போகிறோம். இந்த தொழிலுக்கு தேவைப்படும் இடம், மூலப்பொருட்கள், முதலீடு, வருமானம் போன்ற தகவலை அறிந்து கொள்வோம்.
இடம்:
இந்த தொழிலுக்கு இடம் கட்டாயம் தேவைப்படும். மேலும் இந்த இடமானது மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அதுவும் பேருந்து நிலையத்திற்கு பக்கத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும். பெரிய இடமாக இருக்க வேண்டும். இடத்தை சுற்றி கம்பி compound இருக்க வேண்டும்.
மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இதற்கு மூலப்பொருட்கள் என்று ஏதும் தேவைப்படாது, உங்களிடம் சொந்தமாக இடம் இருந்தால் முதலீடு ஏதும் தேவைப்படாது. அதுவே இடம் இல்லையென்றால் வாடகைக்கு தனியாக பார்க்க வேண்டியிருக்கும். இடத்தை பொறுத்து வாடகை மாறுபடும். தோராயமாக மாதத்திற்கு 10,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.
மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்
வருமானம்:
இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் வண்டிகள் மற்றும் சைக்கிள் வருவதை பொறுத்து வருமானம் மாறுபடும். சைக்கிள் என்றால் வாடகையாக காலை முதல் மாலை வரை 5 ரூபாய், அதுவே பகல் மற்றும் இரவு என்றால் 10 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுவே இரு சக்கர வாகனமாக இருந்தால் 10 ரூபாய் கிடைக்கும்.
உங்க ஸ்டாண்டில் 50 வண்டிகள் ஒரு நாளைக்கு வருகிறது என்றால் 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். அப்போ மாதத்திற்கு 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |