உட்கார்ந்த இடத்தில் இருந்து பணம் சம்பாதிக்க
படித்த படிப்பிக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்கிறவர்கள் ஏராளமானோர் இருக்கிறாரார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் யோசனைகளை வழங்கி வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை செய்து தெரிந்து கொள்ளவும். இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். சரி வாங்க என்ன தொழில்ன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
உட்கார்ந்த இடத்தில் இருந்து 20,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில்:
சுயதொழில் செய்வதில் முக்கியமானது, நீங்கள் செய்கின்ற தொழிலானது மக்களிடம் தேவைகள் அதிகமாக உள்ள தொழிலாக இருக்க வேண்டும். அப்படி உள்ள தொழில்களை வைத்து பார்க்கும் போது உணவு, இடம், உடை, நீர் இந்த மூன்று தொழில் என்று அழியாத தொழிலாக இருக்கிறது. இந்த பதிவில் உடை தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
இடம்:
இந்த தொழிலை நீங்கள் இரண்டு விதமாக செய்யலாம், ஒன்று வீட்டில் இருந்தபடியே செய்யலாம், இல்லையென்றால் தனியாக வாடகைக்கு ஒரு இடம் பார்த்து அதில் தொழில் செய்ய வேண்டியிருக்கும். இரண்டு தொழில்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
வீட்டில் இருந்தபடியே ஜவுளி கடை தொழில் செய்ய போகிறீர்கள் என்றால் வாடகை பிரச்சனை இருக்காது. அதுமட்டுமில்லமால் நீங்கள் அலைய வேண்டியதில்லை.
அதுவே நீங்கள் தனியாக இடம் பார்க்கிறீர்கள் என்றால் மெயின் ஆன இடமாக பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ளவராறு பார்க்க வேண்டும்.
மாலை நேரத்தில் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
நீங்கள் வீட்டில் இந்த தொழிலை ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் உடைக்கு மட்டும் செலவாகும். இதற்காக 30,000 ரூபாய் தேவைப்படும். முதலில் புடவை, டாப் மட்டும் வாங்கி விற்பனை செய்யுங்கள். அதனை பிறகு மக்கள் எதை அதிகமாக கேட்கிறார்களோ அதையும் வாங்கி விற்பனை செய்யங்கள்.
அதுவே தனியாக கடையாக வைக்க போகிறீர்கள் என்றால் அனைத்து விதமான உடைகளும் இருக்க வேண்டும். மேலும் உங்களின் கடைக்கு பக்கத்தில் வேறு ஏதும் கடைகள் இருந்தாலும் அதில் எது மாதிரியான துணிகள் விற்பனை செய்கிறார்கள் என்று பார்த்து கொண்டு அதில் இல்லாத ஆடைகளையும் விற்பனை செய்ய வேண்டும். இதற்கு முதலீடாக 1 லட்சமா தேவைப்படும்.
வருமானம்:
நீங்கள் வீட்டில் இந்த தொழிலை செய்கிறீர்கள் என்றால் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 3000 அல்லது அதை விட கூடவும் வருமானம் கிடைக்கலாம். நன்றாக pickup ஆகிவிட்டது என்றால் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
தனி கடையாக வைத்திருக்கிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு தோராயமாக 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம். சாதாரண நாளை விட சுப நிகழ்ச்சியின் போது வருமானம் தாறுமாறாக இருக்கலாம்.
வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த என்ன செய்வது:
கடையில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த ஆடைகளானது தரமானதாக இருக்க வேண்டும். ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு disconut கொடுக்க வேண்டும். அது போல் தீபாவளி, பொங்கல் போன்ற விஷேஷம் வரும் போது பரிசு பொருட்கள் வாங்கும் ஆடைக்கு தகுந்தது போல் கொடுக்க வேண்டும்.
தினமும் உட்கார்ந்த இடத்திலேயே 10,000 ரூபாய் சம்பாதிக்க இந்த தொழிலை செஞ்சு பாருங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |