தினமும் பணம் சம்பாதிக்க
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். மற்ற நிறுவனத்திடம் சென்று நீங்கள் வேலை பார்க்கும் போது அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதனால் பலரும் சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். இன்னும் சில நபர்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்கின்றனர். அதனால் தான் நம் பதிவில் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தினமும் 3000 ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில்:
உணவு தொழிலை தொடங்கினீர்கள் என்றால் அதற்கு அழிவே இருக்காது. ஏனென்றால் ஒரு மனிதனுக்கு நீர், உணவு, இருப்பிடம் முக்கியமானது. அதனால் இவை மூன்றில் நீங்கள் சம்மந்தப்பட்ட தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் அதற்கு அழிவே இருக்காது. இந்த பதிவில் உணவு தொழிலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
இடம்:
இந்த தொழிலை நீங்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அதாவது பேருந்து நிலையம், இரயில் நிலையம், பைப்பாஸ் போன்ற இடத்தில் வைக்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் நன்றாக இருக்கும்.
தினமும் உட்கார்ந்த இடத்திலேயே 10,000 ரூபாய் சம்பாதிக்க இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருள் என்று பார்த்தால் ஒரு தள்ளுவண்டி, பாத்திரம், சேர் போன்றவை தேவைப்படும்.
நீங்கள் மாலை நேரத்தில் 7 மணி முதல் 10 மணி வரை இந்த தொழிலை செய்ய போகிறீர்கள். அப்போ நீங்கள் மாலை உணவாக தோசை, இட்லி, ஆம்லெட், சப்பாத்தி, பூரி, சாம்பார், சட்னி, குர்மா போன்றவை செய்ய வேண்டியிருக்கும். இந்த உணவுகளை மட்டும் ஆரம்பத்தில் ரெடி செய்யுங்கள். அதன் பிறகு மக்கள் எதை அதிகமாக கேட்கிறார்களோ அதை மட்டும் ரெடி செய்யலாம்.
நீங்க வைக்கும் கடைக்கு பக்கத்தில் வேறு ஏதும் கடைகள் இல்லாமல் பார்த்து கொள்வது அவசியமானது. அப்படி ஒரு வேலை கடை இருக்கும் பட்சத்தில் அந்த கடையை நீங்கள் கவனிக்க வேண்டும். அந்த கடையில் எந்த உணவுகளை அதிகமாக கேட்கிறீர்கள் என்று பார்க்க வேண்டும். அந்த கடையை விட நீங்கள் உணவை ருசியாக கொடுத்தீர்கள் என்றால் உங்களை நாடி தான் வருவார்கள். உணவில் முக்கியமானது ருசி தானே.
மேல் கூறப்பட்டுள்ள மூலப்பொருட்கள் வாங்குவதற்கு 5,000 ரூபாய் தேவைப்படும். இவை ஒரு மட்டும் தான், ஏனென்றால் தள்ளுவண்டி, சேர் எல்லாம் ஒரு முறை மட்டும் தான் வாங்க வேண்டியிருக்கும். மறுமுறை எல்லாம் காய்கறி மற்றும் மாவு வாங்க வேண்டிய செலவு செய்ய 1000 ரூபாய் தேவைப்படும்.
வருமானம்:
உங்கள் கடையில் 3 மணி நேரத்தில் 40 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்று வைத்து கொள்வோம். ஒருவர் குறைந்தது 70 ரூபாய்க்கு சாப்பிடுகிறார்கள் என்றால் தோராயமாக 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |