Daily 500 Income Business in Tamil
அனைவருமே நாம் ஒரு சுயதொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் என்ன தொழில் தொடங்கினால் நல்ல லாபம் பெறலாம்.. வீட்டில் இருந்தே எப்படி சுயதொழில் தொடங்குவது என்று பல யோசனைகளை நமக்குள் இருக்கும். இக்காலத்தில் குடும்பத்தையும் பார்த்து கொள்ளவேண்டும் அதேவேளையில் தொழிலும் செய்ய வேண்டும் என்ற நிலையில் பலபேர் உள்ளனர். அப்படி உள்ளரவர்கள் இக்காலத்தில் மட்டுமில்ல எதிர்காலத்திலும் நல்ல மவுசு உள்ள தொழிலை தேர்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தொழிலை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Nattu Marunthu Kadai Business in Tamil:
ஆமாங்க.. இக்காலத்தில் அனைவருமே அதிகமாக தேடி அலைவது நாட்டு மருந்துகளுக்கு தான். ஏனென்றால் அந்த அளவிற்கு நாட்டு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே எப்போதும் இதன் தேவை என்பது அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் என்றும் அழிவில்லாத இந்த தொழிலை செய்து வந்தால் நல்ல லாபம் பெறலாம். ஓகே வாருங்கள் நாட்டு மருந்து கடை தொடங்க என்ன செய்ய வேண்டும் என்று பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான முதலீடு:
இந்த தொழில் குறைந்தபட்ச முதலீடாக 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். அதாவது ஒரு நாட்டு மருந்து கடையில் இருக்க வேண்டிய அடிப்படையான பொருள் வாங்குவதற்கு இந்த முதலீடு தேவைப்படும். இதையே நீங்கள் பெரிய அளவில் தொடங்க வேண்டுமென்றால் 50 ஆயிரம் முதலீடு போட வேண்டியிருக்கும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் இத்தொழிலை செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..
தேவையான ஆவணங்கள்:
- MSME சான்றிதழ்
- FSSAI சான்றிதழ்
- தொழில் வரி சான்றிதழ்
நாட்டு மருந்து பொருட்கள்:
நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி, வில்வம் பொடி மற்றும் அமுக்கிரா பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும்.
இந்த பொருட்களை எல்லாம் நீங்கள் மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் வாங்கலாம்.
கிடைக்கக்கூடிய வருமானம்:
நாட்டு மருந்துகளை மொத்தமாக வாங்கி நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே விற்பனை செய்யலாம். ஏனெற்றால் இக்காலத்தில் உள்ள அனைவரும் அதிகமாக தேடுவது நாட்டு மருந்து கடை எங்கிருக்கிறது என்று தான்.
எனவே நீங்கள் இத்தொழிலை சிறிய அளவில் தொடங்கினால் ஒரு நாளைக்கு தோராயமாக 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை உட்கார்ந்த இடத்தில் இருந்தே வருமானம் பெறலாம். அதுவே ஒரு மாதத்திற்கு என கணக்கிட்டால் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
குறிப்பு: இங்கு சொல்லப்பட்டுள்ள முதலீடு மட்டும் வருமானம் நீங்கள் தொடங்கும் தொழிலின் அளவை பொருத்தும், கடை இருக்கும் பகுதியை பொருத்தும் மாறுபடும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |