உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

Advertisement

Stationery Shop Business Plan in Tamil

இன்றைய கால கட்டத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களுக்கு மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க பிடிப்பதில்லை. தானாக சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் பல வகையான சுயதொழிலை பற்றி பதிவிட்டு வருகிறோம். இன்றைய பதிவிலும் ஒரு அருமையான தொழிலை பற்றி பார்க்க போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Stationery Shop Business Plan:

மாத வருமானம் தொழில்

இதை பதிவில் ஸ்டேஷனரி ஷாப் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழில் ஆரம்பிப்பது சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால் இந்த தொழிலை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியமில்லை, முதலீடும் குறைவாக காணப்படும். அதுமட்டுமில்லாமல் இதற்கான Demand எப்பொழுதுமே இருக்கும்.

2 மணி நேரம் கடை திறந்தால் போது ஒரே ஒரு கிளிக்கில் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு ஒரு இடம் தேவைப்படும். இந்த இடமானது பள்ளிகள், கல்லூரிகள் அல்லது பேருந்து நிலையம், அலுவலகம் இது போன்ற முக்கியமான இடத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால் இதனுடைய தேவை எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் வைத்தால் தான் வியாபாரம் நன்றாக ஆகும்.

மூலப்பொருட்கள்:

இதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நோட், புக், பேனா, பென்சில், இரப்பர், கலர் பென்சில், ஸ்கேல், கிப்ட், கடிகாரம் போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம். நீங்கள் கடை வைக்கும் இடத்தில் எந்த பொருட்கள் அதிகமாக விற்பனை ஆகுமோ அந்த பொருளை வாங்கி விற்பனை செய்யவும்.

பெண்களுக்கு பிடித்த இந்த ஒரு பொருளை விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்

வருமானம்:

இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் அன்றைய நாள் வருமானத்தை பொறுத்தது. ஒரு நாள் நல்ல ஆகும், ஒரு நாள் வியாபாரம் குறைவாக இருக்கும். தோராயமாக ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்கலாம். அப்போ மாதத்திற்கு 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த வருமானம் தோராயமாக சொல்லப்பட்டுள்ளது, இதை விட கூடவும் ஆகலாம், குறைவாகவும் ஆகலாம்.

8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement