பெண்களுக்கு பிடித்த இந்த ஒரு பொருளை விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சமபாதிக்கலாம்..!

Advertisement

Glass Bangles Business in Tamil

இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பலரும் தங்களது வாழ்க்கையை அடுத்த நிலைக்கு முன்னேற்ற முடியாமல் மிக மிக கஷ்டபடுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட நிலையில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை துவங்கி வாழ்க்கையில் முன்னேறலாம். ஆனால் ஒரு சிலருக்கு என்ன சுயதொழில் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. அதனால் தான் அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு சுயதொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் கண்ணாடி வளையல் விற்பனை செய்யும் தொழில் பற்றிய முழுவிவரங்களையும் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் தான் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிந்து கொண்டு அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Glass Bangles Business Plan in Tamil:

Glass Bangles Business Plan in Tamil

அன்றும் இன்றும் என்றும் பெண்களுக்கு தங்களை மற்றவர்களிடம் அழகாக கட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே உள்ளது. அதனால் அனைத்து பெண்களும் தங்களின் ஆடை அலங்காரத்திற்கு அதிக நேரம் மற்றும் பணத்தினை செலவு செய்வார்கள்.

அப்படி பெண்கள் தங்களை அலங்கரித்து கொள்வதற்கு பயன்படுத்தும் ஒரு பொருள் தான் இந்த கண்ணாடி வளையல்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலை துவங்கினால் அதிக லாபமா பார்க்கலாம்.

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

தொழில் செய்யும் முறை:

இந்த கண்ணாடி வளையல் விற்பனை செய்யும் தொழிலை பொறுத்தவரையில் நீங்கள் இரண்டு முறையில் தொடங்கலாம். அதாவது முதல் முறை நீங்கள் ஒரு கடையை வைத்து அதில் கண்ணாடி வளையல்களை தயாரிக்கும் இடங்களில் இருந்து WholeSale-லாக வாங்கி விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் நீங்களே இந்த கண்ணாடி வளையல்களை தயாரித்து விற்பனை செய்யலாம். இதில் முதலாவது முறையை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் கண்ணாடி வளையல்கள் தான். மேலும் இந்த தொழில் செய்வதற்கான கடை. இந்த தொழில் செய்வதற்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக உங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.

வீட்டில் இருந்தபடி தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தொழில் தொடங்கும் முறை:

முதலில் மக்கள் கூட்டம் அதிக அளவு வரும் கடைத்தெரு போன்றவற்றில் கடையை திறக்க வேண்டும். பின்னர் கண்ணாடி வளையல்களை தயாரிக்கும் இடங்களில் இருந்து WholeSale-லாக வாங்கி விற்பனை செய்யுங்கள்.

அதிலும் குறிப்பாக மற்ற கடைகளை காட்டிலும் உங்களிடம் கலக்சன்ஸ் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் குறைவான விலையாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் மக்கள் உங்கள் கடையை தேடி மீண்டும் மீண்டும் வருவார்கள்.

மேலும் திருவிழாக்கள் போன்றவற்றிலும் நீங்கள் கடைகளை போட்டு விற்பனை செய்யலாம்.

வருமானம்:

நீங்கள் WholeSale-லாக தான் வாங்குகின்றிர்கள் அதனால் உங்களுக்கு மிக மிக குறைவான விலையில் கிடைக்கும். அதனால் நீங்கள் கண்ணாடி வளையல்களை வாங்கி தோராயமாக 1 Set வளையல் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்கலாம்.

எனவே நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 50 Set வளையல்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 10,000 ரூபாய் முதல் 12,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த கண்ணாடி வளையல் விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement