லட்சங்களில் வருமானம்
இன்றைய சூழலில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் நாம் வாழும் சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் படியாகத்தான் உள்ளது. இதனை மற்ற அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் என்றுமே நமது பூமிக்கு ஆபத்து விளைவிக்க கூடியது தான். அப்படி தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் அழிக்க நாம் இயற்கையில் கிடைக்ககூடிய பொருட்களை பிளாஸ்டிக் பதிலாக பயன்படுத்த வேண்டும். இதை கூற எளிதாக இருந்தாலும் செயல்படுத்துவது கடினம். பிளாஸ்டிக்கு பதிலாக பேப்பர், வாழை இலை, பீங்கான்கள் பயன்படுத்தபடுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் தொழிலாக எடுத்தல் அதிக லாபம் பார்க்கலாம. இந்த தொழிலுக்கு அரசும் பலவகை மானியங்களை வழங்குகிறது. வாருங்கள் இன்று வாழை நார்களை கொண்டு பொருட்களை எவ்வாறு தயாரிப்பது, அதனை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இதற்காக அரசிடம் விண்ணப்பிப்பது என்று முழுமையாக பார்க்கலாம்.
மிகப்பெரிய சந்தையை உருவாக்கும் வாழை நார் தயாரிப்புகள்:
வாழை நாரில் மேசை விரிப்பு, ஜன்னல் திரை, கைப்பை, தண்ணீர் பாட்டில் பேக், பென்சில் பாக்ஸ், அலங்கார மின் விளக்குகளுக்கான குடுவை, அர்ச்சனைக் கூடை, காய்கறிக் கூடை, பெட்டி, செயற்கைப் பூ ஜாடி, முறம் உள்ளிட்ட இன்னும் பலவிதமான கைவினைப் பொருள்களைக் கலைநயத்துடன் தயார் செய்து விற்பனை செய்யலாம்.இந்த பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது.
வாழை நார் பைகள்:
ஒரு நபர் ஒரு நாளில் 3 பை வீதம் மாதம் 90 பைகள் பின்னலாம். 3 பை தயாரிக்க ஒரு கிலோ வாழை நார், 100 கிராம் சாயப்பவுடர் தேவை. செலவுகள் 200, உழைப்புக்கூலி 100 என உற்பத்திச் செலவுக்கு ரூ.300 செலவாகிறது. மாதம் 90 பைக்கு ரூ.9 ஆயிரம் செலவாகிறது.
அரசின் உதவிகள்:
வாழை நார் பை தயாரிப்பில் பெண்கள் பெரும்பாலானோர் ஈடுபடுவதால், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன. தொழில் துவங்க மானியமும் உள்ளதால் பெண்கள் குழுவாக இணைந்து இத்தொழிலை மேற்கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம்.
செலவு போக வருமானம்:
ஒரு பையின் உற்பத்தி செலவு ரூ.100. பையின் டிசைனுக்கேற்ப ரூ.175 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யலாம். மாதத்துக்கு 90 பைகள் விற்றால் வருவாய் குறைந்தபட்சம் ரூ.15,750, அதிகபட்சம் ரூ.22,500. இதில் லாபம் மட்டும் ரூ.6,750 முதல் ரூ.13,500 வரை கிடைக்கிறது. கண்காட்சிகளில் சொந்தமாக ஸ்டால் போட்டு விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
மூலப்பொருட்கள்:
வாழை மட்டை, நார் பிரித்தெடுக்கும் இயந்திரம், உப்பு, சாயப்பொடி. கிடைக்கும் இடங்கள்: வாழை மட்டை விவசாயிகளிடம் கிடைக்கும். சாயப்பவுடர் பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும். நார் எடுக்கும் இயந்திரம் கோவை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் கிடைக்கிறது. ஆர்டர் கொடுத்தால் தயாரித்து கொடுப்பார்கள். இயந்திரம் வாங்க முடியாதவர்கள் பிளேடு வைத்து கையாலேயே வாழை மட்டையில் நார்களை உரிக்கலாம். வாழை நார் ரெடிமேடாகவும் கிடைக்கிறது. அதனை நீங்கள் வாங்கியும் உங்களுக்கு பிடித்த பொருட்களை தயாரிக்கலாம்.
இடம்:
வீட்டின் வெளியே நார் உரிக்கும் இயந்திரம் வைக்கவும், நார்களை காய வைக்கவும், வீட்டினுள் பைகளை பின்னுவதற்கும் குறைந்தபட்ச இடம் போதும். இயந்திரத்தின் விலை ரூ.65 ஆயிரம். வீட்டில் வைத்து தொழில் செய்தால் இயந்திரம் தேவையில்லை.
தயாரிக்கும் முறை:
வாழைத்தண்டுகளில் உள்ள மட்டைகளை உரித்து எடுக்க வேண்டும். அவற்றை ஒன்றரை அடி அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். இயந்திரத்தில் மட்டைகளை சொருகினால் நார் நாராக வெளிவரும். அவற்றிலுள்ள நீரை பிழிந்து, வெயிலில் காய வைக்க வேண்டும். நாரின் இரு முனைகளையும் கயிற்றால் கட்டி வைக்க வேண்டும். 2 குடம் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 100 கிராம் தேவைப்படும் கலர் சாயப்பவுடர், ஒரு கிலோ உப்பு போட்டு சாயம் உருவாக்க வேண்டும். அதில் இரு முனைகளும் கட்டப்பட்ட நார்க்கட்டுகளை 5 நிமிடம் ஊற வைத்தால், சாயம் ஏறிய நார் கிடைக்கும். அவற்றை அரை மணி நேரம் உலர வைத்து, நூல், நூலாக பிரிக்க வேண்டும். அவற்றை கொண்டு பொருட்கள் தயாரிக்கலாம்.
மற்ற தயாரிப்புகள்:
வாழை நாரால் தயாரிக்கப்படும் புடவைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அதிக ஈரத்தன்மை உறிஞ்சும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இதனால் வாழைநார் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தினந்தோறும் ஒரு ஷிப்ட் வீதம் மாதத் திற்கு 26 நாட்கள் வேலை செய்தாலே மாதம் ரூ.22,780 வருவாய் கிடைக்கும். இந்த தொழிலை நீங்கள் மேற்கொண்டால் நல்ல வருமானம் பெற்று நீங்கள் அடுத்த முதலாளியாக மாறலாம்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |