Electric Vehicle Charging Station Business Plan in Tamil:
பொதுவாக சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்கும் போது அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனால் தானே முதலாளி ஆக வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனாலேயே என்ன சுயதொழில் செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். அப்படி நீங்கள் தொழில்களை பற்றி யோசிக்கும் போது எதிர்காலத்தில் அதனுடைய தேவை அதிகமா இருக்குதான்னு செக் பண்ணிட்டு தொழிலை ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் ஆனது எதிர்காலத்தில் தேவையே இல்லை என்றால் அவை எப்படி விற்பனை ஆகும். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழில் பற்றி காண்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Electric Vehicle Charging Station Business Plan in Tamil:
நம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனம் அதிகமாக இருக்கின்றது. நிறைய நபர்களுக்கு எலக்ட்ரிக் வாகனம் வாங்க வேண்டும் என்ற அதிகமாக உள்ளது. வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் எலக்ட்ரிக் வாகனத்தின் எண்ணிக்கையானது 45 மில்லியன் முதல் 50 மில்லியன் பயன்பாட்டில் இருக்கும். இதனால் வண்டிகளுக்கு சார்ஜ் செய்யும் தொழிலுக்கு சந்தையில் அதிக டிமாண்ட் இருக்கும். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம்.
நிலையம் அமைக்க தேவையான ஆவணகள்:
- ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கான பதிவு அல்லது LLP
- ஒரு தனி நபர் நிறுவனத்தின் பதிவு
- ஒரு தனிப்பட்ட உரிமையாளரின் பதிவு,
- ஒரு கூட்டாண்மை அல்லது வணிகம்
ஜிஎஸ்டி:
ஜிஎஸ்டியின் படி, பிசிஎஸ் வழியாக மின் வாகனத்தை சார்ஜ் செய்வது ஒரு சேவையாகக் கருதப்படுகிறது. எனவே இந்த செயல்முறைக்கு 18% வரி விதிக்கப்படும். இதன் விளைவாக, இந்தியாவில் உங்கள் EV சார்ஜிங் ஸ்டேஷன் வணிகத் திட்டத்தைத் தொடங்க நீங்கள் ஜிஎஸ்டி பதிவைப் பெற வேண்டும்.
ஆரம்பிக்கும் போது சின்ன கடை மாதம் ஆனதும் உங்க ஊர்லையே பெரிய கடை உங்களோடது தான்..
முதலீடு:
மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையத்தை அமைப்பதற்கான செலவு இடம் மற்றும் சார்ஜிங் புள்ளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். அதனால் தோராயமாக 20 முதல் 30 லட்சம் வரைக்கும் தேவைப்படும்.
வருமானம்:
தினமும் 100 வாகனம் உங்களின் நிலையத்தில் சசார்ஜ் செய்கிறார்கள் என்றால் மாதம் 4 முதல் 5 லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இதில் உங்களுக்கு லாப தொகையாக 2 லட்சம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |