என்றும் கொடிக்கட்டி பறக்கும் தொழில்
இப்போதெல்லாம் மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க பலருக்கும் விருப்பம் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு தான் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனால் தாமாக செய்ய கூடிய சுயதொழில் ஏதவாது இருந்தால் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். சுயதொழில் செய்ய வேண்டுமென்றால் படித்திருக்கணுமோ அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் சுயதொழில் செய்வதற்கு படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது எந்த தொழிலை செய்தால் எந்த காலத்திலும் அழியாத தொழிலாகவும் இருக்க வேண்டும். அந்த மாதிரியான தொழிலாகவும் இருக்க வேண்டும். வாங்க இந்த பதிவில் என்றும் அழியாத தொழில் என்னவென்று என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
என்றும் அழியாத தொழில்:
மக்களுக்கு தேவையான பொருட்களை நாம் தொழிலாக செய்தால் அதற்கான வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் பால் வியாபாரம் செய்யும் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.
ஒரே மாதத்தில் முதலீட்டிற்கு 2 மடங்காக லாபம் தரும் அருமையான தொழில்…!
இடம்:
இந்த தொழில் செய்ய தனியாக இடம் தேவையில்லை. உங்கள் வீடே போதுமானது. ஏனென்றால் நீங்கள் கடையாக வைக்க போவதில்லை. கேட்பவர்களுக்கு நீங்கள் பாலை கொடுக்க போகிறீர்கள் அதனால் தனியாக இடம் தேவையில்லை.
மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மாடு மட்டும் தேவைப்படும். அதன் பிறகு மாட்டிற்கு தேவைப்படும் தீவனம், புண்ணாக்கு, வைக்கோல் போன்றவை தேவைப்படும்.
மாட்டை நீங்கள் முதலில் வாங்கி கொள்ளவும். அதாவது 2 லிட்டர் கறக்கிற அளவுக்கு உள்ள மாட்டை வாங்கி கொள்ளவும். இதனை வாங்குவதற்கு 20000 ரூபாய் தேவைப்படும்.
வருமானம்:
நீங்கள் ஒரு வேலைக்கு 2 லிட்டர் பால் கறக்கிறது என்றால் 2 வேலைக்கு 4 லிட்டர் பால் கறக்கும். அப்போ ஒரு லிட்டர் பாலின் விலை 60 ரூபாய் என்று வைத்து கொள்வோம். அப்போ 4 லிட்டரின் விலை 480 ரூபாய் வருகிறது.
நீங்கள் பால் காரரிடம் பாலை போட்டாலும் சரி இல்லையென்றால் வீட்டிற்கு பாலை விற்றாலும் சரி ஒரு நாளைக்கு 480 ரூபாய் என்றால் 30 நாட்களுக்கு 14,400 ரூபாய் சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |