Diwali Business Ideas 2023 in Tamil
நம்முடைய வாழ்க்கையில் என்ன தான் கஷ்டங்கள் இருந்தாலும் கூட சில பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ யோசிக்கவே மாட்டோம். ஏனென்றால் அவை எல்லாமே அனைவர்க்கும் அடிப்படையான ஒரு விஷயமாக இருக்கிறது. அப்படி பார்த்தால் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை மட்டுமே சிந்தித்தால் போதுமானது. ஏனென்றால் இத்தகைய கருத்தை வைத்து நாம் சீசனுக்கு ஏற்ற தொழிலை செய்யும் போது வருமானத்தை விட லாபம் அதிகமாக பார்க்கலாம். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான தீபாவளி திருநாள் வருவதற்கு குறைந்தபட்சம் 20 நாட்களே இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்ற மாதிரியான ஒரு தொழிலை நீங்கள் இப்போதே செய்ய தொடங்குவதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம். அந்த வகையில் தீபாவளிக்கு அனைவரும் வாங்கக்கூடிய ஒரு தொழிலை தான் செய்து எப்படி வருமானம் பார்ப்பது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
தீபாவளி தொழில்:
தீபாவளி என்பது தமிழக மக்கள் அனைவரும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் கொண்டாடும் ஒரு விழாவாக இருக்கிறது. ஆகையால் இத்தகைய தீபாவளி என்று புதிய ஆடை, பட்டாசுகள், அழகு சாதன பொருட்கள் மற்றும் இனிப்பு & கார வகைகள் என இவை அனைத்தினையும் வாங்குவார்கள். ஆகவே இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் சீசன் தொழிலாக செய்தால் போதும் பணம் சம்பாதிக்கலாம்.
மேல் கூறியதில் ஒன்றாக இன்று பட்டாசு வைத்து எப்படி வருமானம் பார்ப்பது என்று பார்க்கலாம் வாங்க..!
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
தீபாவளி என்றாலே அனைவரும் விதவிதமான பட்டாசுகளை வாங்குவார்கள். ஆகையால் நீங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் Whole Sale முறையில் பட்டாசுகளை வாங்கி கொள்ள வேண்டும்.
இதில் முதலீடு என்பது உங்களிடம் இருக்கும் பணத்தினை பொறுத்தே அமையும். ஆகவே சிறிய முதலீடு முதல் பெரிய முதலீடு வரை எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
மாத சம்பளத்தை விட்டு தள்ளுங்க..இந்த Evergreen Business ஆரம்பிங்க..
கடை திறப்பது எங்கே:
நீங்கள் செய்யவிருக்கும் தொழில் ஒரு சீசன் தொழில் என்பதால் தற்போது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு இடமாக பார்த்து கடையை வாடகைக்கு எடுத்துக்கொள்வது நல்லது. ஆகவே அதற்கு ஏற்றாற்போல் கடையினை அமைத்து கொள்ளுங்கள்.
வருமானம் எவ்வளவு:
இந்த தொழிலில் வருமானம் என்பது பட்டாசுகள் விற்பனை ஆகுவதை பொறுத்து இருந்தாலும் கூட நாள் ஒன்றுக்கு தோராயமாக 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும் சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |