வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொழிலை இப்போதே தொடங்குங்கள்…..

Advertisement

A growing industry

நாம் அனைவருக்கும் சொந்த தொழில் என்பது கனவாக இருக்கும். அந்த கனவை நினைவாக்க நாமும் போராடுவோம். ஆனால் அந்த தொழிலை சரியான தருணத்தில் சரியான முன்னேற்பாடுகளுடன் ஆரம்பிப்பதில் தான் நமக்கு பல சவால்கள் இருக்கும். எப்போது அந்த தொழிலிற்கான சந்தை வாய்ப்பு அதிகமா உள்ளதோ அப்போது ஆரம்பிப்பது சிறந்தது. அந்த வகையில் இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஒரு தொழிலை பற்றித்தான் பார்க்க போகிறோம். ஆமாம் Electric வாகனங்களின் வரத்து இந்தியாவில் அதிகரித்து கொண்டு உள்ளது. வாகனங்களின் வரத்து அதிகரிக்கும் போது அதற்கான EV charging நிலையங்களும் வரும்காலங்களில் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த EV சார்ஜிங் நிலையங்களை திறப்பதற்கு செலவுகள் இருந்தாலும் வரும்காலங்களில் இதற்கான வருவாயும் அதிகரிக்கும். இன்றைய சூழலில் EV சார்ஜிங் நிலையங்கள் குறைவாக இருப்பதால் இந்த தொழில் கணிப்பாக உங்களுக்கு நல்ல வருவாய் வழங்கும். இந்த பதிவில் தமிழ்நாட்டில் EV சார்ஜிங் நிலையத்தை எவ்வாறு அமைப்பது அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழ்நாட்டில் EV சார்ஜிங் நிலையத்தை எவ்வாறு அமைப்பது ?

EV சார்ஜிங் நிலையத்தை அமைப்பது இப்போது ஒரு விலையுயர்ந்த தொழிலாக இருக்கலாம். ஆனால் இது சிறந்த லாபகரமான தொழிலாக இருக்கும். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் நிலையான வருமானத்தை குறுகிய காலத்திற்குள்ளே பெறலாம்.

EV அமைக்க எடுக்க வேண்டிய முயற்சிகள்:

இடம்:

தமிழ்நாட்டில் இன்றைய கணக்குப்படி 310 EV சார்ஜிங் நிலையங்கள் உள்ளது. அதுவே பெட்ரோல் நிலையங்கள் 4891 வரை உள்ளது. இதனை கருத்தில்கொண்டு நீங்கள் உங்கள் EV சார்ஜிங் நிலையத்தை அமைக்க வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்யும் இடம் வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக்கூடியதாகவும், சார்ஜிங் செய்வதற்கு போதுமான இடத்துடன் இருப்பது நல்லது.

EV charging station அனுமதிகள்:

EV சார்ஜிங் நிலையத்தை அமைக்க அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.  அதாவது, மாநில மின்சார வாரியம், உள்ளூர் மாநகராட்சி மற்றும் மின் அமைச்சகம் உள்ளிட்ட துறைகளில் அனுமதிகளைப் பெற வேண்டும்.

சார்ஜிங் கருவி:

அடுத்த கட்டமாக சார்ஜிங் கருவியை நிறுவ வேண்டும். நீங்கள் தேர்வுசெய்யும் சார்ஜிங் கருவிகளின் வகை, நீங்கள் சேவை செய்ய விரும்பும் EVகளின் வகையைப் பொறுத்தது.

EV வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் வேகம், மின்சாரம் மற்றும் சார்ஜிங் தரநிலைகளின் அடிப்படையில் பொருத்தமான சார்ஜிங் நிலையத்தை அமைக்க வேண்டும்.

ஆராய்தல்:

EV charging station நிறுவிய பின்னர் கண்டிப்பாக சோதிப்பது சிறந்தது. பயன்படுத்தும் மின்சாரத்தின் தன்மை, சார்ஜ் செய்யும் வேகம், நம்பகத்தன்மை ஆகியவற்றை சிறந்த குழுவை கொண்டு ஆராய்வது நல்லது.

சந்தைப்படுத்துதல்:

சார்ஜிங் ஸ்டேஷனை, வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் அதை விளம்பரப்படுத்துவது முக்கியம். உங்கள் EV சார்ஜிங் நிலையத்தின் இருப்பிடத்தை  அடையாளப்படுத்தவேண்டும். ஆன்லைனில் விளம்பரங்கள், EV சார்ஜிங் நிலையத்தை விளம்பரப்படுத்த உள்ளூர் வணிகங்களுடன் இணைந்து செயல்படலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதற்கான அறிவிப்பு பலகைகளை வைக்கலாம்

முதலீடு:

தமிழ்நாட்டில் EV சார்ஜிங் நிலையத்தை அமைக்க 1 லட்சம் முதல் 20 பட்சம் வரை செலவாகும்.

அதாவது EV சார்ஜிங் நிலையத்தை அமைக்க, நீங்கள் தேர்வு செய்யும் சார்ஜிங் கருவிகளின் வகை, நிலையத்தின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து முதலீடு மாறுபடும்.

இதர செலவுகள்:

தமிழ்நாட்டில் EV சார்ஜிங் நிலையத்திற்கான தேவை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், EV சார்ஜிங் நிலையத்தினை அமைக்க செலவுகள்அதிகமாக இருக்கலாம். வரும்காலங்களில் குறைவதற்கான வாய்ப்புள்ளது. EV சார்ஜிங் நிலையத்தினை அமைப்பதற்கு இந்திய அரசு உதவுகிறது. EV சார்ஜிங் நிலையத்தின் மூலம் நீங்கள் முதலீடு செய்த தொகைகளை குறுகிய காலங்களிலே திரும்ப பெற முடியும்.

  1. புதிய மின் இணைப்பு
  2. இடம்
  3. EVSE மேலாண்மை மென்பொருள் மற்றும் பராமரிப்பு செலவுகள்

வருமானம்:

தமிழ்நாட்டை பொறுத்தவரை, மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய பொது DC Fast சார்ஜிங் நிலையங்களில் ஒரு கிலோவாட்டிற்கு ரூ 15 வசூலிக்கப்படுகிறது. இந்த விலை இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மட்டுமே. பீக் ஹவர்ஸில் இதற்கான விலை ரூ 35 முதல் ரூ 60 வரை வசூலிக்கப்படுகிறத்து.

இந்த விலை நிர்ணயம் சார்ஜ் செய்யும் வேகத்தை பொறுத்து மாறுபடுகிறது.

நீங்கள் வேகமாக சார்ஜ் செய்யும் பொழுது உங்களுக்கான வருமானம் அதிகரிக்கும். கண்டிப்பாக இந்த தொழில் உங்களுக்கு லாபகரமான தொழிலாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள மின்சார வாகனங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement