தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்க
தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தவுடன் அதில் இருந்து பின்வாங்கும் எண்ணற்ற நபர்கள் இன்றளவும் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். ஏனென்றால் தற்போது ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் கூட அதனை விட்டுவிட்டு தொழில் செய்ய வரும் போது ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்றும், இதற்காக முழு நேரமும் செலவிட வேண்டுமோ என்றும் தான் முதலில் சிந்திக்கிறார்கள். ஆனால் இவை இரண்டும் இல்லாமலே செய்யக்கூடிய எண்ணற்ற தொழில் வகைகள் இருந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் மாலை நேரத்தில் அதுவும் விழாக்காலம் மற்றும் சாதாரணமான நாள் என இப்படி வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு தொழிலை தான் இன்று பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
மாலை நேர தொழில்:
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மாலை நேரத்தில் சூடான பஜ்ஜி, போண்டா மற்றும் சில என இவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதிலும் குறிப்பாக பண்டிகை நேரத்தில் பர்ச்சசிங் செய்ய வேண்டிய வேலை இருப்பதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதனால் இதுபோன்ற நேரங்களில் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் கடையை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக என வைப்பதன் மூலம் நல்ல வருமானம் பார்க்கலாம்.
தொழில் செய்யும் முறை:
- பஜ்ஜி
- மிளகாய் பஜ்ஜி
- சமோசா
- காலிபிளவர் பக்கோடா
- வெங்காய பக்கோடா
- பானிப்பூரி
- காளான்
மேல் கூறியது மட்டும் இல்லாமல் வேறு ஏதேனும் ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து நீங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் கூட அதனையும் செய்து விற்கலாம்.
அதனால் நீங்கள் என்ன ஸ்னாக்ஸ் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ற மாதிரியான மூலப்பொருளை வாங்கி கொள்ளுங்கள். இதில் முதலீடும் நீங்கள் செய்யும் தொழில் முறையை பொறுத்தே அமையும்.
வேலை நேரம் எவ்வளவு:
இத்தகைய தொழிலில் உங்களுக்கான வேலை நேரம் என்பது மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தோராயமாக இருக்கக்கூடும். எனவே இவ்வளவு குறைவான நேரத்தில் நாள் ஒன்றுக்கு தோராயமாக 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்.
கிராமத்தில் இன்னும் 10 வருஷம் ஆனாலும் நஷ்டமே இல்லாமல் கொடிகட்டி பறக்கும் தொழில் இது தான்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |