மண்ணை வளமாக்கும் இந்த தொழிலை தொடங்கினால் மன நிறைவுடன் நல்ல வருமானம் பார்க்கலாம்.

Advertisement

EverGreen Business Idea

வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் நாம் சூப்பரான சுயதொழில் ஒன்றினை பற்றிய தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக இக்காலத்தில் உள்ள பலரும் வேலைக்கு சென்று சம்பாதிப்பதை விட சுயமாக ஒரு தொழில் தொடங்கி அதில் அதிக லாபம் பெற வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். இதற்காக என்ன தொழில் தொடங்கலாம்..? குறிப்பாக குறைந்த முதலீட்டில் என்ன தொழில் தொடங்கலாம் என்றுதான் யோசித்து கொண்டிருப்பார்கள். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் சூப்பரான சுயதொழில் ஒன்றினை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

இயற்கை உரம் உங்களுக்கான வளமான தொழிலாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது மருத்துவத்திற்கு தான். இதற்கு காரணம் பெயர் தெரியாத பல நோய்கள். இந்த நோய்களுக்கு காரணம் செயற்கை உரங்கள். செயற்கை உரங்களில் பல வேதிப்பொருட்கள் கலந்து நமது உடல் ஆரோக்கியத்தை கெடுகிறது. இதில் இருந்து தப்பிக்க இப்போது பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரங்களை நாடுகின்றனர். விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை தயாரிக்க போதுமான நேரம் இருப்பதில்லை. அதனால் இயற்கை உரங்கள் எங்கு மலிவான விலையில் கிடைக்கும் என்பது அவர்களின் தேடலாக உள்ளது. இந்த தேடலை உங்களின் தொழிலாக மாற்றிக்கொண்டால் நீங்கள் உங்கள் தொழிலில் மிக வேகமாக முன்னேறிவிடலாம்.

இயற்கை உரங்கள் நிறைய இருக்கிறது இதில் மக்கள் அதிகம் தேடுவது மண் புழு உரத்தை தான். இந்த மண் புழு உரத்தை நீங்கள் தயாரித்து விற்பனை செய்தால் கண்டிப்பாக நல்ல லாபம் பெறலாம்.

தயாரிக்கும் முறை:

இயற்கை உரம்

வீடுகளில் கிடைக்கும் காய்கறி, பழங்களின் மக்கும் கழிவுகளை பயன்படுத்தினால் முதலீடு இல்லாமல் மண்புழு உரம் தயாரிக்கலாம்.

மண் புழுஉரம் மண்ணுக்கு சிறந்த வளத்தை தருவதால் அது உணவுக்கு சத்துக்களை வழங்கும்.

வெர்மி கம்போஸ் தயாரிப்பு முறைகளை சரியாக கடைபிடித்தல் கண்டிப்பாக நீங்கள் தரமான உரத்தை தயாரிக்கலாம்.

சந்தை வாய்ப்பு:

விவசாயத்திற்கும் பெருமளவில் மண்புழு உரம் உதவும். அதுமட்டும் அல்லாமல் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்புக்கு மண்புழு உரம் சிறந்த ஈடு பொருளாக இருக்கும்.

இதனால் கண்டிப்பாக நல்ல வருமானத்தை பெறலாம்.

வேளாண்மை வளர்ச்சி மையங்கள் மூலம் விற்பனை செய்யலாம்.

அருகில் உள்ள விற்பனை குடங்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

இந்த தோழிலை ஆரம்பிக்க அதிக இடம் தேவையில்லை.

உங்களின் தோட்டத்தில் ஒரு பகுதியில் ஆரம்பித்தால் போதும்.

தேவையான பொருட்கள்:

மாட்டுச் சாணம், மீன் கழிவுகள், காய்கறிமற்றும் பழங்களின் கழிவுகள் போதுமானது.

மக்கும் தன்மையுடைய பொருட்களை பயன்படுத்தலாம்.

இந்த தொழிலை நீங்கள் சிறிய அளவில் தொடங்க உங்களுக்கு 5000 முதலீடாக தேவைப்படும்.

இதற்கு இயந்தியங்கள் தேவை இல்லை. சரியான நேரத்தில் அனைத்தையும் ஒருவரே செய்யலாம்.

லாபம்:

இதில் நீங்கள் தொடக்கத்தில் முதலீடு செய்த தொகையை விட 3 மடங்கு லாபம் பார்க்கலாம்.

சவிவசாயிகளுக்கு உங்களின் உரம் பற்றி தெரிந்துவிட்டால் கண்டிப்பாக பல மடங்கு லாபம் பார்க்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement