Evergreen Business Ideas with Low Cost in Tamil
இன்றைய சூழலில் அனைவருக்குமே தங்களின் வாழ்க்கையில் உள்ள பொருளாதார தேவையை சமாளித்து தங்களின் வாழ்க்கை நடத்தி செல்வது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாக தான் உள்ளது. அதனால் அனைவருமே தங்களின் வாழ்க்கையில் எந்த ஒரு பொருளாதார நஷ்டத்தையும் சந்திக்காமல் இருப்பதற்காக ஏதாவது ஒரு பணிக்கு செல்ல வேண்டும் அல்லது ஏதாவது ஒரு சுயதொழிலை துவங்க வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு கைத்தொழில் அல்லது சுயதொழிலை துவங்க வேண்டியுள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு எளிமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் உங்கள் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒரு தொழிலான ஆடை விற்பனை தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்து எவ்வாறு அதிக அளவு சம்பாதிப்பது என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Low Investment Evergreen Business Ideas in Tamil:
இன்றும் என்றும் அளவில்லாத ஒரு சில சுயதொழில்கள் உள்ளது. அப்படி உள்ள சுயதொழில்களில் இந்த ஆடை விற்பனை தொழிலும் ஒன்று. அதனால் நீங்களும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பெறலாம்.
தொழிலை எப்படி தொடங்குவது:
இந்த ஆடை விற்பனை செய்யும் தொழிலை பொறுத்த வரையில் இரண்டு முறையில் நீங்கள் இந்த தொழிலை தொடங்கலாம். அதாவது நீங்கள் சொந்தமாக ஒரு இடத்தில் நிலையான கடையை வைத்தும் இந்த தொழிலை செய்யலாம். அப்படியில்லை என்றால் உங்கள் வீட்டில் இருந்தபடி Hole Sale கடைகளில் இருந்து ஆடைகளை வாங்கி Online மூலமும் விற்பனை செய்யலாம்.
இதில் இரண்டாவது முறையை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
அந்த காலம் முதல் இந்த காலம் வரை அதிக Demand உள்ள தொழில் இதுதான்
தேவையான மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இந்த தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் அது ஆடைகள் தான். அதே போல் இந்த தொழில் தொடங்குவதற்கு தேவையான முதலீடு என்று பார்த்தால் நாம் தேர்ந்தெடுக்கும் ஆடைகளின் மாடல் மற்றும் தரத்தை பொறுத்து மாறுபடும்.
தோராயமாக 10,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் முதலீடாக தேவைப்படும்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இந்த தொழிலை செய்வதற்கு உங்கள் வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தாலே போதும். நீங்கள் வாங்கி வைத்துள்ள ஆடைகளை Online மூலம் விற்பனை செய்கிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
அதே போல் இந்த தொழில் செய்வதற்கு நீங்கள் தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை நீங்கள் வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு ஓய்வெடுக்கும் நேரத்தில் வெறும் 2 மணி நேரம் ஒதுக்கினால் கூட போதும்.
ஒரு முறை வாங்கி கைமாதிவிட்டால் மட்டும் போதும் மாதம் 1,00,000 வரை சம்பாதிக்கலாம்
தொழில் செய்யும் முறை:
இந்த தொழிலை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும் உங்களிடம் உள்ள ஆடைகளை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் அதிலிருந்து வாடிக்கையாளர்களை பிடித்து அவர்களுக்கும் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
இப்பொழுது நீங்கள் Hole Sale கடைகளில் இருந்து ஆடைகளை வாங்கி விற்பனை செய்வதால் உங்களுக்கு அந்த ஆடைகள் மிகவும் குறைந்த விலையில் தான் கிடைக்கும்.
அதனால் அந்த ஆடைகளை நீங்கள் மற்றவர்களுக்கு விற்பனை செய்யும்பொழுது ஒவ்வொரு ஆடைகளுக்கும் அதன் மாடல் மற்றும் தரத்தை பொறுத்து நீங்களே ஒரு சரியான விலையை நிர்ணையித்து விற்கலாம்.
அதாவது நீங்கள் ஒரு ஆடையை 200 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால் அதனை மற்றவர்களுக்கு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு 100 ரூபாய் லாபமாக கிடைக்கும்.
இதே போல் நீங்கள் ஒரு நாளைக்கு 50 ஆடைகளை விற்பனை செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 5,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இந்த தொழிலுக்கான மவுஸ் என்றும் குறையவே குறையாது
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |