Festival Business Ideas in Tamil
பொதுவாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஓடி ஓடி உழைக்கின்றோம். ஆனாலும் வீட்டில் ஒருவர் மட்டும் வேலை பார்த்து அவர்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து நமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. அதனால் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. சில பேர் வீட்டில் உள்ள பெண்கள் முழு நேரம் வேலை செய்ய முடியாது. ஏனென்றால் வீட்டில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருப்பார்கள். இதனால் வேலைக்கு செல்ல முடியாது. அதனால் இன்றைய பதிவில் சீசன் தொழிலை பற்றி பார்க்க போகிறோம். இந்த தொழில் செய்வதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், முதலீடு பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பண்டிகை கால தொழில்:
இந்த பதிவில் பண்டிகை கால தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்னும் கொஞ்ச நாட்களில் தீபாவளி வர உள்ளது, தீபாவளி என்றாலே ஞாபகத்திற்கு வருவது டிரஸ், பட்டாசு,பலகாரம் இவை மூன்று தான் நினைவிற்கு வரும். அதனால் இந்த மூன்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தொழிலாக செய்யலாம். இந்த பதிவில் பலகார தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம்.
இடம்:
இந்த பலகார தொழிலை இரு முறையில் செய்யலாம், அதாவது ஒன்று பலகாரம் செய்து கடைகளில் கொடுத்து விற்க சொல்வது, இன்னொன்று நீங்களே நேரடியாக விற்பது என்று இரு முறைகளில் செய்யலாம்.
இந்த காலத்தில் யாரும் வீட்டில் பலகாரங்களை செய்வதில்லை, கடையில் ஈசியாக வாங்கி கொள்கிறார்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலை தாரளமாக செய்யலாம்.
இதற்கு இடம் தனியாக தேவையில்லை, நீங்கள் கடையில் கொடுத்து விற்க சொல்ல போகிறீர்கள் என்றால் தனியாக இடம் தேவையில்லை, அதுவே நீங்களே நேரடியாக விற்க போகிறீர்கள் என்றால் இடம் தேவைப்படும்.
மாத சம்பளத்தை விட்டு தள்ளுங்க..இந்த Evergreen Business ஆரம்பிங்க..
மூலப்பொருட்கள்:
நீங்கள் என்னென்ன பலகாரங்கள் செய்ய போகிறீர்களோ அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்க வேண்டியிருக்கும். எடுத்துக்கட்டாக முறுக்கு, ரவா உருண்டை, பயிர் உருண்டை, அதிரசம், குலாப் ஜாமுன் போன்ற பலகாரம் செய்ய போகிறீர்கள் என்றால் இதற்கு முதலீடாக 20,000 ரூபா தேவைப்படும். இவை அனைத்தையுமே நீங்கள் கிலோ கணக்கில் செய்ய வேண்டியிருக்கும்.
வருமானம்:
இதற்கு வருமானம் எண்று பார்த்தால் ஒரு மாதத்தில் 50,000 ரூபா சம்பாதிக்கலாம். இவை தோராயமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதை விட அதிகமாகவும் வருமானம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |