Festive Season Business Ideas
அனைவருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதேசமயம் என்ன தொழில் தொடங்குவது என்ற குழப்பமும் இருக்கும். அந்த வகையில் பார்த்தால் சில நபர்கள் ஒரு நிலையான தொழிலை செய்யாமல் வேறு வேறு தொழிலை செய்வார்கள். ஆனால் அதில் தான் நல்ல வருமானத்தை பெறுவார்கள். இத்தகைய தொழில் முறைக்கு தான் சீசன் அல்லது விழாக்கால தொழில் என்று பெயர். ஆகையால் நம்மிடம் உள்ள குறைவான பணத்தினை வைத்தே ஒரு சீசன் அல்லது விழாக்கால தொழிலை ஆரம்பித்தோம் என்றால் அதிலேயே நல்ல வருமானத்தை பெற்று வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்து விடலாம். இத்தகைய முறையினை நாம் ஒப்பிட்டு பார்த்தால் தற்போது ஆடிப்பெருக்கு விழாவானது வரவிருக்கிறது. அதனால் இந்த ஆடிப்பெருக்கு விழாவிற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி ஒரு தொழிலாக ஆரம்பித்தோம் என்றால் தாறுமாறான வருமானத்தை பெறலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
அதிக வருமானம்:
ஆடிப்பெருக்கு விழா என்பது தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடக்கூடிய ஒரு விழாவாக உள்ளது. அதனால் இந்த ஆடிப்பெருக்கு என்று அனைவருடைய வீட்டிலும் சாமி கும்பிடுவதற்காக கட்டாயமாக சில பொருட்களை வாங்குவார்கள்.
ஆகையால் அத்தகைய பொருட்களை அனைத்தினையும் நீங்கள் மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருமானம் பெறுவது என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
மூலப்பொருள்:
இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு மூலப்பொருளாக கண்ணாடி வளையல், மஞ்சள், தாலி கயிறு, குங்குமம் மற்றும் காதோலை கருகமணி என இவற்றை அனைத்தினையும் மொத்தமாக வாங்கி கொள்ளுங்கள்.
மேலும் அனைத்து விதமான பழங்களையும் மூலப்பொருளாக வாங்கி கொள்ளுங்கள். இவை மட்டுமே இந்த தொழிலிற்கான மூலப்பொருளாகவும்.
முதலீடு போட்டால் நஷ்டம் இல்லாத தொழில் இது
முதலீடு:
நீங்கள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் ஆரம்ப முதலீடாக 20,000 ரூபாய் வைத்து கொள்ளுங்கள். மேலும் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடமாக பார்த்து இரு கடையினை வாடகைக்கு எடுத்து விடுங்கள்.
அப்படி இல்லை என்றால் தள்ளுவண்டியில் 2-ஐ வாடகைக்கு எடுத்து அதிலும் விற்பனை செய்யாமல்.
சம்பாதிக்கும் பணம்:
இத்தகை சீசன் தொழிலை நீங்கள் செய்வதன் மூலமாக தோராயமாக ஒரு நாளைக்கு 4,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அப்படி என்றால் இன்னும் 8 நாட்கள் உள்ளது. ஆகவே வெறும் 8 நாட்களில் தோராயமாக 32,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
நேரம்:
மேலும் இந்த தொழிலுக்கான நேரம் என்பது வெறும் 4 அல்லது 5 மணி நேரம் தான். ஆகவே குறைந்த நேரத்தில் அதிக வருமானத்தை தரக்கூடிய தொழிலாக உள்ளது.
மாதம் ரூ. 40,000/- சம்பாதிக்க 5 சூப்பரான பிசினஸ்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |