இந்த பொருளை இப்படி தயாரித்து விற்றால் நல்ல லாபம் பெறலாம்.

Advertisement

லாபத்தை அதிகரிக்கும் மதிப்புக்கூட்டு பொருட்கள் 

குடும்பத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதே மனிதனின் ஒரே குறிக்கோள். இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகளை தேடி அலைவதை விட ஒரு நடுத்தர சுயதொழிலை தேர்வு செய்ய சிந்திக்க வேண்டியாது அவசியமாக உள்ளது. அத்தகைய சுயதொழிலுக்கு பெரிய படிப்பு அவசியம் இல்லை. முன்னேரவேண்டும் என்ற எண்ணமும் கடினமுயற்சியும் போதும். அத்தகைய கடின முயற்சி கொண்ட அனைவரும் பணம் சம்பாதிக்க மகிழ்ச்சியாக சுதந்திரமாக சொந்தக்காலில் நிற்க ஒரு தொழில் வேண்டும். அதுவும் நாம் தேர்தெடுக்கும் தொழில் நமக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரவேண்டும். நீங்கள் தேர்தெடுக்கும் தொழில் சந்தையில் நல்ல சூழல் இருக்க வேண்டும். இப்படி பல காரணிகளை சார்ந்து நாம் தொழிலை தொடங்க வேண்டும். அத்தகைய ஒரு தொழிலை பற்றித்தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். இந்த தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை, வாருங்கள் அந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது, அந்த தொழிலை வெற்றிகரமாக எவ்வாறு மாற்றுவது, தொழிலை தொடங்க எவ்வளவு செலவுகள் ஆகும் போன்ற காரணிகளை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்….

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

லாபம்தரும் தொழில்கள்: 

amla Value added products

இன்றைய உலகில் இயற்கையாக கிடைக்கும் ஒரு பொருளுக்கு கிடைக்கும் மதிப்பை விட அதனை மெருகேற்றி வழங்கினால் அதன் மதிப்பும் அதிகரிக்கும் விலையும் கூடும்.

இப்படி உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டு பொருட்கள் என்கின்றோம்.

அதாவது, நமது வீட்டில் கிடைக்கும் தேங்காயின் விலை ரூபாய் 10 முதல் ரூபாய் 25 வரை இருக்கும்.

அதுவே தேங்காயில் இருந்து உற்பத்தி செய்யும் எண்ணெயின் விலை அதிகம். அது மட்டும் அல்லாமல் எண்ணெய் தயாரிக்கும்போது ஒதுக்கப்படும் கசடுகளுக்கும் மதிப்பு உண்டு.

அதாவது ஒரு பொருளை அப்படியே விற்றால் அதன் மதிப்பு குறைவு அதன் மதிப்பை கூட்டி விற்கும் போது மதிப்பு அதிகம்.

மதிப்புக்கூட்டு பொருட்கள்: 

ஊறுகாயில் தொடங்கி சோப்பு வரை அனைத்துமே மதிப்பு கூட்டு பொருட்கள் தான். இதனை தொடங்க அதிக முதலீடு தேவையில்லை. இயற்கை முறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு பொருளின் விலையையும் உயர்த்தலாம்.

எடுத்துக்காட்டாக..

நெல்லிக்காய் விற்பனையில் அதிகம் லாபம் பார்க்க முடியாது. அதுவே நெல்லிக்காயை மிட்டாய், ஊறுகாய் போன்று இயற்கையாக  வீட்டில் தயாரித்து விற்றால் அதிகம் லாபம் பார்க்க முடியும்.

நெல்லிக்காய் மதிப்பு கூட்டு பொருட்கள்:

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜாம்

நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய் மிட்டாய்

நெல்லிக்காய் வத்தல்

நெல்லிக்காய் சிப்ஸ்

நெல்லிக்காய்  தொக்கு

இவை நீங்கள் வீட்டிலே தயாரிக்க கூடியவை.

இதுமட்டும் அல்லாமல் நெல்லிக்காய் பயன்படுத்தி சோப்பு, ஷாம்பு, பாக்கு சீவல் போன்றவை தயாரிக்க முடியும்.

முதலீடு மற்றும் வருமானம்:

high profit business idea in tamil

நீங்கள் நெல்லிக்காயை பறித்து விற்றால் அதிகபட்சம் மாதத்திற்கு 10,000 முதல் 15,000 வரை விற்பனை செய்து லாபம் பெறுகிறீர்கள் என்றால், அதுவே அந்த நெல்லிக்காயை ஊறுகாயாக தயாரித்து விற்கும் போது 50,000 முதல் 60,000 வரை கிடைக்கும்.

ஊறுகாய் தயாரிக்க அதிகப்படியாக இயந்திரங்களோ முதலீடோ தேவையில்லை.

நெல்லிக்காய் தேவையான மூலப்பொருட்கள் வாங்க 1,000 ரூபாய் தேவைப்படும். அதனை பாதுகாக்க பாட்டில்கள் தேவைப்படும் அதன் விலை 2,000 வரை இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டிலே சிறிய அளவில் உற்பத்தி செய்து விற்றால் செலவுகள் குறையும். தொடக்கத்தில் சிறிய அளவில் ஆரம்பிப்பதால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது.

ஊறுகாய் மட்டுமல்லாது உங்களுக்கு என்ன பொருட்கள் சிறந்த முறையில் தயாரிக்க ஏதுவாகஉள்ளதோ அதனை உற்பத்தி செய்யலாம்.

சந்தை வாய்ப்பு:

என்னதான் சந்தையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் அதிகம் இருந்தாலும் அவை தயாரித்து மக்களின் கையில் புழக்கத்திற்கு வர நீண்ட நாட்கள் தேவைபடுகிறது. அதன் சுவை மற்றும் ஆரோக்கியம் கேள்வி குறியாக உள்ளது.

அதனால் உங்களின் பொருட்களை உள்ளூர் கடைகளில் எளிதில் கிடைப்பது போல் தயாரித்து விற்பனை செய்யலாம்.

தினமும் 2 மணிநேரம் ஒதுக்கினால் போதும் மனநிறைவோடு கைநிறைய சம்பாதிக்கலாம்…

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement