Garam Masala Business Idea in Tamil
வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஃப்ரியாக இருக்கும் நேரத்தில் என்ன வேலைகள் செய்வது என்று நினைக்கும் பெண்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்களுக்கு உதவும் வகையில் இப்பதிவில் ஒரு சுயதொழில் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அது என்ன தொழில்.?இத்தொழிலை எப்படி செய்வது.? போன்ற விவரங்களை பின்வருமாறு விவரமாக தொகுத்துள்ளோம். எனவே, இப்பதிவை முழுவதுமாக படித்து உங்களுக்கு விருப்பமானால் இத்தொழிலை செய்து பயனடையலாம். ஓகே வாருங்கள் அத்தொழில் என்னவென்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How To Start Garam Masala Business in Tamil:
தேவையான முதலீடு:
சொந்தமாக ஒரு சிறந்த தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தொடங்குங்கள். ஆண்கள் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள் இருவருமே இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழில் செய்வதற்கு முதலீடு அதிகம் தேவை கிடையாது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலாக இது இருக்கும்.
தேவையான இடம்:
இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடமெல்லாம் தேவை இல்லை. உங்கள் வீட்டில் சிறிய இடம் இருந்தாலே போதும். இந்த தொழிலை செய்து நல்ல லாபம் பார்க்கலாம். என்ன தொழில் என்று யோசித்து கொண்டே இருப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. கரம் மசாலா பொடி செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
தயாரிக்கும் முறை:
வீட்டில் இருந்த படியே கரம் மசாலா பொடி தயார் செய்து விற்பனை செய்யலாம். இந்த பொடி இந்த காலத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படும் ஒரு பொருள் ஆகும். அதனால் நீங்கள் இந்த பொடியை தயார் செய்து விற்பனை செய்யலாம்.அதற்கு நீங்கள் கரம் மசாலா செய்ய தேவையான பொருட்களை மொத்தமாக கிடைக்கும் கடைகளில் இருந்து வாங்கி கொள்ள வேண்டும். பின் அந்த பொருட்கள் அனைத்தையும் வெயிலில் காயவைத்தோ அல்லது கடாயில் வைத்து வறுத்தோ எடுத்து கொள்ளவேண்டும்.
வீட்டிலேயே கரம்மசாலா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ⇒ கரம்மசாலா செய்முறை..!
பின் அதை அரைத்து பொடியாக செய்ய வேண்டும். பின் அதை பாக்கெட்டில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும்.
விற்பனை செய்யும் இடங்கள்:
இந்த மசாலாவை நீங்கள் உங்கள் பகுதிகளில் இருக்கும் மளிகை கடை, பெட்டிக்கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் பெரிய மால் போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.
இந்த மசாலா விற்பனை செய்வதற்கு நீங்கள் FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நீங்கள் கடைகளில் முதலிலேயே ஆர்டர் எடுத்து கொண்டு இந்த கரம் மசாலாவை விற்பனை செய்து வரலாம். இதனால் உங்களுக்கு ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.
வாரம் 33,250 ரூபாய் வருமானம் தரக்கூடிய எளிமையான சுயதொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |