வீட்டில் இருந்தபடியே நீங்கள் தொழில் செய்யலாம்
குடும்பத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதே மனிதனின் ஒரே குறிக்கோள். இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகளை தேடி அலைவதை விட ஒரு நடுத்தர சுயதொழிலை தேர்வு செய்ய சிந்திக்க வேண்டியாது அவசியமாக உள்ளது. அத்தகைய சுயதொழிலுக்கு பெரிய படிப்பு அவசியம் இல்லை. முன்னேரவேண்டும் என்ற எண்ணமும் கடினமுயற்சியும் போதும். அத்தகைய கடின முயற்சி கொண்ட பெண்கள் பணம் சம்பாதிக்க மகிழ்ச்சியாக சுதந்திரமாக சொந்தக்காலில் நிற்க ஒரு தொழில் வேண்டும்.
பெண்களுக்கு எப்போதும் பொறுமையும் கலையுணர்வும் அதிகம், அந்த திறனை கொண்டு வீட்டில் இருந்தபடியே நீங்களும் அதிகம் சம்பாதிக்கலாம். சாதிக்க துடிக்கும் பெண்களுக்காக சிலதொழில்கள் இதோ ..
1. e-tailing
e-tailing என்பது வேகமாக வளர்ந்து வரும் e-commerce வணிகங்களில் ஒன்றாகும். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைனில் பொருட்களை விற்க விரும்பும் அனைத்து பெண்களுக்கும் அதிகாரம் அளித்து அதிசயங்களை உருவாக்கியுள்ளன. இல்லத்தரசிகள் தங்கள் நண்பர்கள் குழுகளுடன் ஆன்லைனில் விற்பனையாளர்களைத் தொடர்புகொண்டு தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, உங்களின் விருப்பமான பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் பெருமளவில் வாங்கி விற்கலாம். பொருட்களை விற்க டிஜிட்டல் ஆன்லைன் டெலிவரி தளங்கள் இப்போது அதிகம் இணையத்தில் உள்ளது. இந்த தொழில் உங்களுக்கு அதிக வருமானத்தை வழங்கும்.
2. முகமூடிகள் உற்பத்தி
இன்றைய மாறிவரும் சூழல் மக்கள் அனைவரையும் முகமூடிகள் மற்றும் சானிடைசர்களை வாங்கத் தள்ளியுள்ளது. இந்த இரண்டு பொருட்களும் இப்போது அடிப்படை தேவையாகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களில் இந்த பொருட்கள் உற்பத்தியில் இருந்த போட்டி இப்போது குறைந்துள்ளது. ஏனெனில் இது ஒப்பீட்டளவில் குறைவாக வணிக பயன்படாக இருந்தது. ஆனால் இவற்றின் தேவை வரும் காலங்களிலும் அடிப்படை தேவையாக இருக்கலாம். இதற்கு அதிக முதலீடு தேவையில்லை, உங்களிடம் ஒரு தையல் மெஷின் மற்றும் தேவையான துணிகள் இருந்தால் போதும். இவற்றை விற்பனை செய்யவும் நிறைய ஆன்லைன் தளங்கள் வந்துவிட்டது.
தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில்
3. சலூன் அல்லது பியூட்டி பார்லர்
சலூன் அல்லது பியூட்டி பார்லர், வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் மற்றும் முதலீடு மற்ற தொழில்களை விட சற்று அதிகமாக காணப்பட்டாலும் அதற்கு ஏற்ற வருவாய் இருக்கும். அழகுசாதனப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அதிக செலவாகும். உங்களிடம் தொழில் தொடங்குவதற்கான இடம் இருந்தால் உங்களது முதலீடு குறையும். உங்கள் சலூன் அல்லது பியூட்டி பார்லர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்தால் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் மிக எளிதாகும். உங்கள் சேவை தனித்துவமானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும். இந்த தொழிலை வீட்டில் தொடங்கினால் மாதம் 5,000 முதல் 10,000 வரை சம்பாதிக்கலாம்.
4. வீட்டில் பூட்டிக்
வீட்டில் நீங்கள் இந்த தொழிலான பூட்டிக்கை தொடங்கினால் நல்ல வருவாய் கிடைக்கும். பூட்டிக் என்பது இல்லத்தரசிகளுக்கு விருப்பமான, பாரம்பரியமான மற்றும் வருவாய் ஈட்டும் யோசனையாகும். இந்த யோசனை வீட்டு அடிப்படையிலான மற்றும் குறைந்த பட்ஜெட் துணி உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை வணிகமாகும். புதிய டிரெண்டிங் ஃபேஷன் பற்றி நன்கு அறிந்த இல்லத்தரசிகள் இது மிகவும் பொருத்தமானது. உங்கள் வீட்டிலே உங்களது கடையை ஆரம்பிக்கலாம். அதனால் வாடகை மிச்சமாகும். துணி மற்றும் இதர பொருட்களுக்கு மட்டும் முதலீடு தேவைப்படும். நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ரெடிசெய்து கொடுப்பதால் உங்களது வருவாய் அதிகரிக்கும்.
5. டிஃபன் அல்லது கேட்டரிங் சேவைகள்
டிஃபன் அல்லது கேட்டரிங் சேவைகள் குறைந்த பட்ஜெட்டில் செய்யக்கூடிய எளிமையான தொழில். உங்களுக்கு சமையலில் ஆர்வமும், சமைத்த உணவை சரியான நேரத்தில் மக்களை சென்றடைய சரியான வழியும் இருந்தால் எந்த தொழில் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
6. கையால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள்
இந்த யோசனை இல்லத்தரசிகளுக்கு கணிசமான அளவு வருமானத்தை உருவாக்கி தரும். அவர்களின் திறன்களை சுதந்திரமாக கைவினை பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தலாம். ஒரு தனித்துவமான யோசனையாக இருந்தால், இது நிறைய புதிய வாடிக்கையாளர்களை தேவைகளை பூர்த்திசெய்யலாம். ஓவியங்கள், மெழுகுவர்த்திகள், பைகள், தூபக் குச்சிகள், கேக்குகள், ஆடைகள், நகைகள், தொப்பிகள், மர பொம்மைகள், திரைச்சீலைகள், விரிப்புகள், போர்வைகள், பானைகள், பொம்மைகள், சோப்புகள், மரச் சாமான்கள் போன்றவை பிரபலமான கையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களில் அடங்கும்.
அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
7. விளையாட்டு பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையம்
இப்போது ப்ளே ஸ்கூல், ஒரு வணிக செயல்பாடாக படிப்படியாக விரிவடைந்து விட்டது. குறைந்த செலவுகள், பாதுகாப்பான இடம் மற்றும் மக்கள் கூடும் இடமாகவும் இருந்தால் மிகவும் எளிது. உங்களுக்கு குழந்தைகளுடன் உங்கள் நாட்களை செலவழித்து மகிழலாம். காலப்போக்கில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்த முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |