பெண்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் 2 மணி நேரம் வேலை பார்த்தால் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

Advertisement

2 மணி நேரம் வேலை பார்த்தால் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

நம் முன்னோர்களின் காலத்தில் தான் பெண்களை படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறையிலும் பணிபுரிகின்றனர். இருந்தாலும் சிலரது வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் அதனால் அவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அவர்களுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் காலை மற்றும் மாலை நேரங்களில் 2 மணி நேரம் வேலை பார்த்தால் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம். அது என்ன தொழில் என்று இந்த முழு பதிவையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Housekeeping Services Business Plan in Tamil:

2 மணி நேரம் வேலை பார்த்தால் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

கணவன், மனைவி இரண்டு நபரும் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் வீட்டை பராமரிக்க முடிவதில்லை. வீட்டை பராமரித்து கொள்வதற்கு கட்டாயம் ஒரு வேலையாட்களை தேடுகிறார்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலை தாரளமாக செய்ய ஆரம்பிக்கலாம். இந்த தொழிலுக்கான Demand என்று பார்த்தால் வெளிநாட்டில் அதிகமாக இருக்கிறது. நம் நாட்டிலும் கிராமத்தில் இல்லையென்றாலும் நகரத்தில் இதற்கான Demand அதிகமாக உள்ளது.

3 மணிநேரம் வேலை செய்தால் போதும் அசால்ட்டா 4,000 ரூபாய் சம்பாதிக்கலாம் 

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

எல்லா தொழிலுக்கும் முதலீடு மற்றும் மூலப்பொருட்கள் இல்லாமல் தொழிலை தொடங்க முடியாது. ஆனால் இந்த தொழிலுக்கு முதலீடு மற்றும் மூலப்பொருட்கள் என்று எதுமே தேவைப்படாது.

எப்படி ஆரம்பிப்பது:

இந்த தொழிலை நீங்கள் ஒரு வீட்டில் முதலில்  ஆரம்பித்தாலே போதும். என்ன வேலை செய்ய வேண்டுமென்றால் பாத்திரங்களை கழுவுதல், வீட்டை பெருக்குவது, மாப் போடுவது போன்ற வேலைகளை பார்க்க வேண்டியிருக்கும். இந்த தொழிலுக்கு முக்கியமாக தேவைப்படுவது நாணயம், நம்பிக்கை, சுத்தம் இவை மூன்றும் உங்களிடம் காணப்பட்டால் நீங்கள் வீடு வீடாக செல்ல தேவையில்லை, அவர்களே உங்களை அழைப்பார்கள்.

நீங்கள் வேலை பார்க்கும் வீட்டில் நல்லபடியாக பார்த்தால் அவர்களே மற்றவர்களிடம்  உங்களை பத்தி சொல்லி விடுவார்கள். இதனால் தொழில் பெரிதாக கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.

தொழில் செய்யும் நேரம் மற்றும் வருமானம்:

இந்த தொழிலை நீங்கள் காலை மற்றும் மாலை என்று 2 மணி நேரம் மட்டும் பார்த்தால் போதுமானது. இந்த 2 மணி நேரத்தில் நீங்கள் 3 வீடு பார்க்கலாம். அப்போ இரண்டு வேலையும் சேர்த்து ஒரு நாளைக்கு 6 வீட்டில் பார்க்க வேண்டியிருக்கும்.

நீங்கள் ஒரு வீட்டில் செயயும் நேரத்தை பார்த்து சம்பளம் வழங்குவார்கள். தோராயமாக மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement