Aloe Vera Business Plan
வேலைக்கு செல்லும் அனைவருக்கும் சம்பளம் வரும் தேதி எப்போது வரும் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருந்தே கொண்டே தான் இருக்கும். இவ்வாறு பணம் வந்த உடனே நமக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதை அனைத்தினையும் பூர்த்தி செய்து கொள்வோம். ஆனால் இவ்வாறு செய்யாமல் நாம் சொந்தமாக ஏதோ ஒரு தொழிலை ஆரம்பிக்கின்றோம் என்றால் எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மற்ற 4 பேருக்கு வேலை கொடுத்து அவர்களையும் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வைப்பதற்கு ஒரு உதாரணமாக வாழலாம். ஆகவே இன்று தினசரி 3,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.
How to Earn 3000 Per Day Business Plan:
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் ஏற்றதாக இருக்கும். கற்றாழையை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். கற்றாழை பல நன்மைகள் மற்றும் சத்துக்கள் காணப்படுவதால் கற்றாழை பவுடர் தயாரித்து விற்பனை செய்யக் கூடிய தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
மேலும் கற்றாழை பவுடருக்கு Demand அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும்.
தேவையான மூலப்பொருள்:
கற்றாழை பவுடர் தொழிலை செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலப்பொருளை வாங்கி கொள்ளுங்கள்.
- Heat Sealing Machine
- கற்றாழை
- Zip Lock Pouch
தேவையான இடம்:
வீட்டின் ஒரு பகுதியில் வெறும் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும். இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.
வாங்கி விற்கும் இந்த தொழிலை செய்தால் போதும்.. நல்ல லாபம் பெறலாம்
தொழில் தொடங்கும் முறை:
நீங்கள் கடையில் இருந்து கற்றாழையை கிலோ கணக்கில் அல்லது உங்களுக்கு தேவையான அளவு வாங்கி கொண்டு சுத்தமாக அதை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அப்போது தான் கற்றாழை விரைவாக காயும். நறுக்கிய கற்றாழையை வெயிலில் 2 நாட்கள் நன்றாக காயவைக்க வேண்டும்.
அடுத்து 2 நாட்கள் கழித்து கற்றாழை சுருங்கிய பதத்திற்கு வந்து பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடியாக வரும் வரை அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் கற்றாழை பவுடர் தயார்.
பேக்கிங் முறை:
இப்போது 100 கிராம் மற்றும் 200 கிராம் அளவுகளில் கற்றாழை பவுடரை Zip Lock Pouch-ல் நிரப்பி அந்த கவரை சீல் இயந்திரத்தை கொண்டு பேக் செய்ய வேண்டும். பின் இந்த கவரின் மேல் உங்கள் தகவல்களை அச்சிட்டு விற்பனை செய்யலாம்.
மேலும் இந்த தொழிலை ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம்.
படித்து முடித்துவிட்டு என்ன வேலை செய்வது என்று தெரியவில்லையா
வருமானம்:
இந்த பவுடரை மருந்தகம், இயற்கை அங்காடி, பேன்ஸி ஸ்டோர் போன்ற கடைகளில் விற்பனை செய்யலாம்.
ஒரு பாக்கெட் 200 கிராம் பவுடரின் விலை 300 ரூபாய் வரை இருக்கும். ஆகவே நீங்கள் ஒரு நாளைக்கு 10 பாக்கெட் பவுடர் விற்பனை செய்தால் தோராயமாக ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அப்படி என்றால் மாதம் 90,000 ரூபாய் வரை தோராயமாக வருமானம் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |