How to Earn 3000 rs in One Day
இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்து விட்டு படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் வாழ்க்கையில் முன்னேற அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். சிந்தனை செய்தால் மட்டும் போதாது. அதற்கான வழிகளையும் தேட வேண்டும். சில நபரிடம் சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதற்கான முதலீடு இருக்காது, சிலரிடம் முதலீடு இருக்கும் அதற்கான யோசனைகளை இருக்காது. அதனால் இன்றைய பதிவில் எல்லோருக்கும் உதவிடும் வகையில் குறைந்த முதலீட்டில் தொடங்க கூடிய தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில்:

பொதுவாக சளி,காய்ச்சல், தலையில் நீர்கோர்த்து உள்ளவர்கள் மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஆகியோருக்கு சிறந்த தீர்வாக அமைவது ஆவி பிடித்தல் ஆகும். அப்படி ஆவி பிடிக்கும் பொழுது இந்த Herbal Steaming Bags-யை பலர் பயன்படுத்துவார்கள். அதனால் நீங்கள் இந்த Herbal Steaming Bags தயாரிக்கும் தொழிலை செய்தீர்கள் என்றால் தினமும் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.அதனால் இந்த Herbal Steaming Bags தயாரிக்கும் தொழிலை உடனடியாக தொடங்குங்கள்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கிராம்பு, ஓமம் , காய்ந்த புதினா இழைகள், காய்ந்த வேப்பிலை, காய்ந்த எலுமிச்சை பழம், பச்சை கற்பூரம், Cotton Bags மற்றும் Cotton Box ஆகியவை தேவைப்படும்.மேலும் Herbal Steaming Bags-களை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் போதும்.
வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு தான் அதிக மவுஸ்
பேக்கிங் செய்யும் முறை:

முதலில் நாம் கிராம்பு, ஓமம் காய்ந்த புதினா இலைகள், காய்ந்த வேப்பிலை, காய்ந்த எலுமிச்சை பழம், பச்சை கற்பூரம் நன்கு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த பொடியை நாம் வாங்கி வைத்துள்ள Cotton Bags-களில் ஒவ்வொரு காட்டன் பைகளிலும் 5 கிராம் என்ற விகிதத்தில் சேர்த்து பேக்கிங் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதனை நாம் வாங்கி வைத்துள்ள Cotton Box-களில் ஒவ்வொரு Cotton Box-களிலும் 30 Cotton Bags என்ற விகிதத்தில் வைத்து பேக்கிங் செய்து கொள்ள வேண்டும்.
விற்பனை செய்யும் முறை:
பேக்கிங் செய்து வைத்துள்ள Cotton Box-களை நாட்டு மருந்து கடைகள், மெடிக்கல், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம். தோராயமாக ஒரு Cotton Box-ன் விலை 150 ரூபாய் – 200 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 20 Cotton Box-களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,000 ரூபாய் – 4,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
உங்க கையில் 1000 ரூபாய் இருந்தாலே போதும் நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்கலாம்
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |














