Daily 2 Hours Work in a Day
பொதுவாக வேலை செய்யும் மற்றும் தொழில் செய்யும் நபர் என யாராக இருந்தாலும் வேலை செய்யும் நேரம் என்பது குறைவாகவும், சம்பளம் என்பது அதிகமாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அப்படி பார்த்தால் என்ன வேலை செய்வது என்று அனைவருக்கும் மிகவும் குழப்பமாக தான் இருக்கும். ஏனென்றால் கம்மியான நேரத்தில் அதிகமாக வருமானம் தரக்கூடிய தொழில்களை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாமல் இருக்கும் காரணத்தினால் இத்தகைய யோசனையினை அப்படியே விட்டு விடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு என்று இதுபோன்ற தொழில் வகைகள் என்பது அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று குறைந்த நேரத்தில் அதிகமாக வருமானம் கிடைக்கக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
அதிக வருமானம் தினமும்:
அதிக வருமானம் தரும் தொழில்களில் எண்ணற்றவை இருக்கிறது. அதில் ஒன்றாக இன்று மெஹந்தி போடும் தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது உங்களுக்கு நன்றாக மெஹந்தி போடும் திறமை மட்டும் இருந்தால் போதும் கைநிறைய வருமானம் பார்க்கலாம்.
மேலும் இந்த மெஹந்தி போடும் தொழிலை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
தொழிலுக்கான இடம்:
இந்த தொழிலை பொறுத்தவரை இடம் என்பது வெறும் 10×10 அளவில் மட்டும் இருந்தால் போதும். அப்படி பார்த்தால் இந்த தொழிலை நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த தொழிலிற்கு என்று மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு என்று எதுவும் கிடையாது.
தினமும் உட்கார்ந்த இடத்திலேயே 10,000 ரூபாய் சம்பாதிக்க இந்த தொழிலை செஞ்சு பாருங்க
தொழில் செய்யும் முறை:
மெஹந்தி டிசைன் தொழிலை பொறுத்தவரை நீங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பிரபலமாவது கடினமாக இருந்தாலும் கூட அதன் பின்பு நல்ல முன்னேற்றம் அடைந்து விடலாம்.
அதனால் உங்களுடைய ஊரில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் என இவர்களுக்கு நடக்கும் திருமண விழாவில் முதலில் மெஹந்தி போட்டு உங்களின் திறமையினை வெளிப்படுத்தினால் போதும் முன்னேற்றம் அடைந்து விடலாம்.
அதேபோல் பார்லருக்கு சென்று அங்கும் கமிஷன் முறையில் மெகந்தி போடுவதை வேலையினை பேசி வைத்து கொண்டீர்கள் என்றாலும் நல்ல வருமானம் பார்க்கலாம்.
இத்தகைய தொழிலை செய்யும் போதே மணப்பெண்ணுக்கு புடவை நன்றாக இந்த காலத்திற்கு ஏற்றவாறு கட்டி விடும் வேலையினையும் பார்த்தீர்கள் என்றால் நல்ல சம்பாதிக்கலாம்.
வருமானம்:
ஒரு மணப்பெண்ணுக்கு இரண்டு கைகள் முழுவதும், 2 கால்கள் முழுவதும் மற்றும் முகூர்த்தம் மற்றும் பரிசம் என இரண்டு வகையான புடவை கட்டி விடுதல் என இவை அனைத்தினையும் சேர்த்து மொத்தமாக 10,000 ரூபாய் அசால்ட்டா சம்பாத்தித்து விடலாம், அதுவும் 2 முதல் 4 மணி நேரத்தில்.
இப்படிப்பட்ட தொழிலை விட்டு விடாமல் திறமை இருப்பவர்கள் தட்டி செல்லுங்கள்.
8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |