Ladies Best Home Business in Tamil
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் பெண்களை வெளியில் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். அதிலும் கல்யாணம் ஆன பெண்களை வேலைக்கு அனுப்பவே மாட்டார்கள். அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.. ஏனென்றால் கல்யாணம் ஆன பெண்களுக்கு வீட்டில் அதிக வேலைகள் இருக்கும். அவற்றை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். ஒரு நாளைக்கு 3 மணிநேரமாவது வேலை இல்லாமல் இருப்பார்கள். அப்படி அவர்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே அந்த தொழில் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு பிடித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கான தொழில்:
இக்காலத்தில் அனைவருமே பரபரப்பான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதாவது காலையில் எழுந்ததும் அவசர அவசரமாக எல்லா வேலையும் முடித்து விட்டு வேலைக்கு செல்வது, பள்ளிக்கு செல்வது, கல்லூரிக்கு செல்வது போன்றவற்றை செய்து வருகிறோம். இதனால் பெரும்பாலான வீடுகளில் கடைகளில் என்ன உணவு ரெடிமேடாக இருக்கிறதோ அதனை வாங்கி வந்து உடனே சமைத்து விடுகிறோம்.
எனவே இக்காலத்தில் உள்ள அனைவருமே ஈசியாக வேலை முடிந்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள். எனவே, நீங்கள் அதற்கேற்றவாறு ஒரு தொழிலை செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம்.
அதாவது, இக்காலத்தில் அனைவரது வீட்டிலும் ரசம் வைப்பார்கள். ஆனால், இதற்கு பூண்டு, மிளகு உள்ளிட்ட ரசத்திற்கு தேவையான பல பொருட்களை தயார் செய்து சமைக்க லேட் ஆகும் என்பதால் கடைகளில் விற்கும் ரசப்பொடியை வாங்கி வந்து பயன்படுத்துவார்கள்.
எனவே இத்தொழிலை நீங்கள் செய்து உங்கள் பகுதிகளில் விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் பெறலாம்.
பெண்கள் இந்த தொழிலை செஞ்சா இவ்வளவு மவுசா.! அப்போ உடனே செய்ய வேண்டியது தான்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இத்தொழிலை முதலில் சிறிய அளவில் தொடங்குவதற்கு குறைந்த அளவிலான முதலீடே தேவைப்படும். தோராயமாக சொல்லப்போனால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வரும்.
இந்த முதலீட்டிலே ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள் மற்றும் பேக்கிங் கவர் போன்ற அனைத்தும் அடங்கி விடும்.
தொழில் செய்யும் முறை:
நீங்கள் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வந்து சுத்தமான முறையில் ரசப்பொடியை தயாரித்து அதனை நீங்கள் விரும்பிய பேக்கிங் கவர் அளவுகளில் பேக்கிங் செய்து கொள்ளலாம்.
அதாவது 10 ரூபாய் பாக்கெட், 20 ரூபாய் பாக்கெட் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்ய வேண்டிய இடம்:
பேக்கிங் செய்த ரசப்பொடியை உங்கள் ஊரில் அல்லது உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மளிகை கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் பெட்டிக்கடை போன்ற இடங்களில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.
வருமானம்:
தோரயமாக, 20 ரூபாய் ரசப்பொடி பாக்கெட்டை ஒரு நாளைக்கு 50 விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு உங்களுக்கு 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுவே மாதக்கணக்கில் கணக்கிட்டால் 30,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |